The Thiru Kural – Tamil Pravachan

The Thiru Kural Tamil Pravachan by Sri.Varadan Sekar ( Parasakthi Family member)

Introduction: Play Audio


 

கடவுள் வாழ்த்து

Kural (குறள்) – 0001 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  பகவன் முதற்றே உலகு. Play Audio

Kural (குறள்) – 0002 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.  Play Audio

Kural (குறள்) – 0003 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.  Play Audio

Kural (குறள்) – 0004 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. Play Audio

Kural (குறள்) – 0005 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. Play Audio

Kural (குறள்) – 0006 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். Play Audio

Kural (குறள்) – 0007 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0008 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0009 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. Play Audio

Kural (குறள்) – 0010 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். Play Audio


 

வான்சிறப்பு

Kural (குறள்) – 0011  வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. Play Audio

Kural (குறள்) – 0012  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. Play Audio

Kural (குறள்) – 0013  விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. Play Audio

Kural (குறள்) – 0014  ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். Play Audio

Kural (குறள்) – 0015  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. Play Audio

Kural (குறள்) – 0016  விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. Play Audio

Kural (குறள்) – 0017  நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். Play Audio

Kural (குறள்) – 0018  சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. Play Audio

Kural (குறள்) – 0019  தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். Play Audio

Kural (குறள்) – 0020  நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. Play Audio


 

நீத்தார் பெருமை

Kural (குறள்) – 0021  ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. Play Audio

Kural (குறள்) – 0022  துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. Play Audio

Kural (குறள்) – 0023  இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. Play Audio

Kural (குறள்) – 0024  உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. Play Audio

Kural (குறள்) – 0025  ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி. Play Audio

Kural (குறள்) – 0026  செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். Play Audio

Kural (குறள்) – 0027  சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. Play Audio

Kural (குறள்) – 0028  நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். Play Audio

Kural (குறள்) – 0029  குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0030  அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். Play Audio


 

அறன்வலியுறுத்தல்

Kural (குறள்) – 0031  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0032  அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. Play Audio

Kural (குறள்) – 0033  ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். Play Audio

Kural (குறள்) – 0034  மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. Play Audio

Kural (குறள்) – 0035  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். Play Audio

Kural (குறள்) – 0036  அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. Play Audio

Kural (குறள்) – 0037  அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. Play Audio

Kural (குறள்) – 0038  வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். Play Audio

Kural (குறள்) – 0039  அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. Play Audio

Kural (குறள்) – 0040  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. Play Audio


 

இல்வாழ்க்கை

Kural (குறள்) – 0041  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. Play Audio

Kural (குறள்) – 0042  துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. Play Audio

Kural (குறள்) – 0043  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. Play Audio

Kural (குறள்) – 0044  பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். Play Audio

Kural (குறள்) – 0045  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. Play Audio

Kural (குறள்) – 0046  அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன். Play Audio

Kural (குறள்) – 0047  இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. Play Audio

Kural (குறள்) – 0048  ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0049  அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. Play Audio

Kural (குறள்) – 0050  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். Play Audio


 

வாழ்க்கைத் துணைநலம்

Kural (குறள்) – 0051  மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. Play Audio

Kural (குறள்) – 0052 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். Play Audio

Kural (குறள்) – 0053 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. Play Audio

Kural (குறள்) – 0054 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0055 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. Play Audio

Kural (குறள்) – 0056 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். Play Audio

Kural (குறள்) – 0057 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. Play Audio

Kural (குறள்) – 0058 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. Play Audio

Kural (குறள்) – 0059 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. Play Audio

Kural (குறள்) – 0060 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. Play Audio


 

மக்கட்பேறு

Kural (குறள்) – 0061 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. Play Audio

Kural (குறள்) – 0062 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். Play Audio

Kural (குறள்) – 0063 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். Play Audio

Kural (குறள்) – 0064 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். Play Audio

Kural (குறள்) – 0065 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. Play Audio

Kural (குறள்) – 0066 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். Play Audio

Kural (குறள்) – 0067 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். Play Audio

Kural (குறள்) – 0068 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. Play Audio

Kural (குறள்) – 0069 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். Play Audio

Kural (குறள்) – 0070 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். Play Audio


 

அன்புடைமை

Kural (குறள்) – 0071  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். Play Audio

Kural (குறள்) – 0072  அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0073  அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. Play Audio

Kural (குறள்) – 0074  அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0075  அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0076  அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. Play Audio

Kural (குறள்) – 0077  என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். Play Audio

Kural (குறள்) – 0078  அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. Play Audio

Kural (குறள்) – 0079  புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0080  அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. Play Audio


விருந்தோம்பல்

Kural (குறள்) – 0081  இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. Play Audio

Kural (குறள்) – 0082  விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. Play Audio

Kural (குறள்) – 0083  வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. Play Audio

Kural (குறள்) – 0084  அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். Play Audio

Kural (குறள்) – 0085  வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். Play Audio

Kural (குறள்) – 0086  செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0087 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.Play Audio

Kural (குறள்) – 0088  பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். Play Audio

Kural (குறள்) – 0089  உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. Play Audio

Kural (குறள்) – 0090  மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. Play Audio


இனியவைகூறல்

Kural (குறள்) – 0091  இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். Play Audio

Kural (குறள்) – 0092  அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0093  முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். Play Audio

Kural (குறள்) – 0094  துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0095  பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. Play Audio

Kural (குறள்) – 0096  அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். Play Audio

Kural (குறள்) – 0097  நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். Play Audio

Kural (குறள்) – 0098  சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். Play Audio

Kural (குறள்) – 0099  இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. Play Audio

Kural (குறள்) – 0100  இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. Play Audio

செய்ந்நன்றி அறிதல்

Kural (குறள்) – 0101  செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0102  காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. Play Audio

Kural (குறள்) – 0103  பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. Play Audio

Kural (குறள்) – 0104  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். Play Audio

Kural (குறள்) – 0105  உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. Play Audio

Kural (குறள்) – 0106  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0107  எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0108  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. Play Audio

Kural (குறள்) – 0109  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0110  எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. Play Audio

நடுவு நிலைமை

Kural (குறள்) – 0111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். Play Audio

Kural (குறள்) – 0114 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். Play Audio

Kural (குறள்) – 0115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. Play Audio

Kural (குறள்) – 0116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். Play Audio

Kural (குறள்) – 0117 கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. Play Audio

Kural (குறள்) – 0118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் மைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. Play Audio

Kural (குறள்) – 0119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். Play Audio

Kural (குறள்) – 0120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். Play Audio

அடக்கமுடைமை

Kural (குறள்) – 0121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். Play Audio

Kural (குறள்) – 0122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. Play Audio

Kural (குறள்) – 0125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. Play Audio

Kural (குறள்) – 0126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. Play Audio

Kural (குறள்) – 0127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. Play Audio

Kural (குறள்) – 0128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். Play Audio

Kural (குறள்) – 0129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. Play Audio

Kural (குறள்) – 0130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. Play Audio

ஒழுக்கமுடைமை

.Kural (குறள்) – 0131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். Play Audio

.Kural (குறள்) – 0132 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. Play Audio

Kural (குறள்) – 0133 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். Play Audio

Kural (குறள்) – 0134 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0135 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. Play Audio

Kural (குறள்) – 0136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. Play Audio

Kural (குறள்) – 0137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. Play Audio

Kural (குறள்) – 0138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். Play Audio

Kural (குறள்) – 0139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். Play Audio

Kural (குறள்) – 0140 உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். Play Audio

பிறனில் விழையாமை

Kural (குறள்) – 0141 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். Play Audio

Kural (குறள்) – 0142 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். Play Audio

Kural (குறள்) – 0143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார். Play Audio

Kural (குறள்) – 0144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். Play Audio

Kural (குறள்) – 0145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. Play Audio

Kural (குறள்) – 0146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். Play Audio

Kural (குறள்) – 0147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். Play Audio

Kural (குறள்) – 0148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. Play Audio

Kural (குறள்) – 0149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். Play Audio

Kural (குறள்) – 0150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. Play Audio

பொறையுடைமை

Kural (குறள்) – 0151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. Play Audio

Kural (குறள்) – 0152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. Play Audio

Kural (குறள்) – 0153 இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. Play Audio

Kural (குறள்) – 0154 நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும். Play Audio

Kural (குறள்) – 0155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. Play Audio

Kural (குறள்) – 0156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். Play Audio

Kural (குறள்) – 0157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். Play Audio

Kural (குறள்) – 0159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். Play Audio

Kural (குறள்) – 0160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். Play Audio

அழுக்காறாமை

Kural (குறள்) – 0161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. Play Audio

Kural (குறள்) – 0162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். Play Audio

Kural (குறள்) – 0163 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். Play Audio

Kural (குறள்) – 0164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. Play Audio

Kural (குறள்) – 0165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது. Play Audio

Kural (குறள்) – 0166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.Play Audio

Kural (குறள்) – 0167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். Play Audio

Kural (குறள்) – 0168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். Play Audio

Kural (குறள்) – 0169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். Play Audio

Kural (குறள்) – 0170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். Play Audio

வெஃகாமை

Kural (குறள்) – 0171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். Play Audio

Kural (குறள்) – 0172 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். Play Audio

Kural (குறள்) – 0173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். Play Audio

Kural (குறள்) – 0174 இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். Play Audio

Kural (குறள்) – 0175 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். Play Audio

Kural (குறள்) – 0176 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.Play Audio

Kural (குறள்) – 0177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். Play Audio

Kural (குறள்) – 0178  அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். Play Audio

Kural (குறள்) – 0179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. Play Audio

Kural (குறள்) – 0180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. Play Audio

புறங்கூறாமை

Kural (குறள்) – 0181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது. Play Audio

Kural (குறள்) – 0182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. Play Audio

Kural (குறள்) – 0183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். Play Audio

Kural (குறள்) – 0184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். Play Audio

Kural (குறள்) – 0185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். Play Audio

Kural (குறள்) – 0186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். Play Audio

Kural (குறள்) – 0187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். Play Audio

Kural (குறள்) – 0188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. Play Audio

Kural (குறள்) – 0189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. Play Audio

Kural (குறள்) – 0190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. Play Audio

பயனில சொல்லாமை

Kural (குறள்) – 0191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும். Play Audio

Kural (குறள்) – 0192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. Play Audio

Kural (குறள்) – 0193 நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. Play Audio

Kural (குறள்) – 0194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. Play Audio

Kural (குறள்) – 0195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். Play Audio

Kural (குறள்) – 0196 பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். Play Audio

Kural (குறள்) – 0197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். Play Audio

Kural (குறள்) – 0199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். Play Audio

Kural (குறள்) – 0200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். Play Audio

தீவினையச்சம்

Kural (குறள்) – 0201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. Play Audio

Kural (குறள்) – 0202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். Play Audio

Kural (குறள்) – 0203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். Play Audio

Kural (குறள்) – 0204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. Play Audio

Kural (குறள்) – 0205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. Play Audio

Kural (குறள்) – 0206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். Play Audio

Kural (குறள்) – 0207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். Play Audio

Kural (குறள்) – 0208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. Play Audio

Kural (குறள்) – 0209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். Play Audio

Kural (குறள்) – 0210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். Play Audio

ஒப்புரவறிதல்

Kural (குறள்) – 0211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. Play Audio

Kural (குறள்) – 0212 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. Play Audio

Kural (குறள்) – 0213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற. Play Audio

Kural (குறள்) – 0214 ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். Play Audio

Kural (குறள்) – 0215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. Play Audio

Kural (குறள்) – 0216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். Play Audio

Kural (குறள்) – 0217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். Play Audio

Kural (குறள்) – 0218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். Play Audio

Kural (குறள்) – 0219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. Play Audio

Kural (குறள்) – 0220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. Play Audio

ஈகை

Kural (குறள்) – 0221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. Play Audio

Kural (குறள்) – 0222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. Play Audio

Kural (குறள்) – 0223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள. Play Audio

Kural (குறள்) – 0224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. Play Audio

Kural (குறள்) – 0225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். Play Audio

Kural (குறள்) – 0226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. Play Audio

Kural (குறள்) – 0227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். Play Audio

Kural (குறள்) – 0229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். Play Audio

Kural (குறள்) – 0230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. Play Audio

 

புகழ்

Kural (குறள்) – 0231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். Play Audio

Kural (குறள்) – 0233 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். Play Audio

Kural (குறள்) – 0234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. Play Audio

Kural (குறள்) – 0235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. Play Audio

Kural (குறள்) – 0236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். Play Audio

Kural (குறள்) – 0238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். Play Audio

Kural (குறள்) – 0239 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். Play Audio

Kural (குறள்) – 0240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். Play Audio

 

அருளுடைமை

Kural (குறள்) – 0241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. Play Audio

Kural (குறள்) – 0242 நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. Play Audio

Kural (குறள்) – 0243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். Play Audio

Kural (குறள்) – 0244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. Play Audio

Kural (குறள்) – 0245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. Play Audio

Kural (குறள்) – 0246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். Play Audio

Kural (குறள்) – 0247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. Play Audio

Kural (குறள்) – 0248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். Play Audio

Kural (குறள்) – 0250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. Play Audio

 

புலான்மறுத்தல்

 

Kural (குறள்) – 0251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள். Play Audio

Kural (குறள்) – 0252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0253 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். Play Audio

Kural (குறள்) – 0254 அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல். Play Audio

Kural (குறள்) – 0255 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. Play Audio

Kural (குறள்) – 0256 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். Play Audio

Kural (குறள்) – 0257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். Play Audio

Kural (குறள்) – 0259 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். Play Audio

தவம்

 

Kural (குறள்) – 0261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. Play Audio

Kural (குறள்) – 0262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. Play Audio

Kural (குறள்) – 0263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். Play Audio

Kural (குறள்) – 0264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். Play Audio

Kural (குறள்) – 0265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். Play Audio

Kural (குறள்) – 0266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. Play Audio

Kural (குறள்) – 0267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். Play Audio

Kural (குறள்) – 0269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். Play Audio

Kural (குறள்) – 0270 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். Play Audio

கூடாவொழுக்கம்

 

Kural (குறள்) – 0271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். Play Audio

Kural (குறள்) – 0272 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். Play Audio

Kural (குறள்) – 0273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. Play Audio

Kural (குறள்) – 0274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. Play Audio

Kural (குறள்) – 0275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். Play Audio

Kural (குறள்) – 0276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். Play Audio

Kural (குறள்) – 0277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். Play Audio

Kural (குறள்) – 0279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். Play Audio

Kural (குறள்) – 0280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். Play Audio

கள்ளாமை

 

Kural (குறள்) – 0281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. Play Audio

Kural (குறள்) – 0282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். Play Audio

Kural (குறள்) – 0283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். Play Audio

Kural (குறள்) – 0285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். Play Audio

Kural (குறள்) – 0286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். Play Audio

Kural (குறள்) – 0287 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல். Play Audio

Kural (குறள்) – 0288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. Play Audio

Kural (குறள்) – 0289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். Play Audio

Kural (குறள்) – 0290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. Play Audio

வாய்மை

 

Kural (குறள்) – 0291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். Play Audio

Kural (குறள்) – 0292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். Play Audio

Kural (குறள்) – 0293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். Play Audio

Kural (குறள்) – 0294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். Play Audio

Kural (குறள்) – 0295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. Play Audio

Kural (குறள்) – 0296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். Play Audio

Kural (குறள்) – 0297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். Play Audio

Kural (குறள்) – 0299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. Play Audio

Kural (குறள்) – 0300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. Play Audio

வெகுளாமை

 

Kural (குறள்) – 0301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். Play Audio

Kural (குறள்) – 0302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. Play Audio

Kural (குறள்) – 0303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். Play Audio

Kural (குறள்) – 0304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. Play Audio

Kural (குறள்) – 0305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். Play Audio

Kural (குறள்) – 0306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். Play Audio

Kural (குறள்) – 0307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. Play Audio

Kural (குறள்) – 0308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். Play Audio

Kural (குறள்) – 0310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. Play Audio

இன்னாசெய்யாமை

 

Kural (குறள்) – 0311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். Play Audio

Kural (குறள்) – 0312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். Play Audio

Kural (குறள்) – 0313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். Play Audio

Kural (குறள்) – 0314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். Play Audio

Kural (குறள்) – 0315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. Play Audio

Kural (குறள்) – 0316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். Play Audio

Kural (குறள்) – 0317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. Play Audio

Kural (குறள்) – 0318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். Play Audio

Kural (குறள்) – 0319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். Play Audio

Kural (குறள்) – 0320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். Play Audio

 

கொல்லாமை

 

Kural (குறள்) – 0321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். Play Audio

Kural (குறள்) – 0322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. Play Audio

Kural (குறள்) – 0323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. Play Audio

Kural (குறள்) – 0325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. Play Audio

Kural (குறள்) – 0326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. Play Audio

Kural (குறள்) – 0327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. Play Audio

Kural (குறள்) – 0328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை. Play Audio

Kural (குறள்) – 0329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. Play Audio

Kural (குறள்) – 0330 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். Play Audio

 

நிலையாமை

 

Kural (குறள்) – 0331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. Play Audio

Kural (குறள்) – 0332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. Play Audio

Kural (குறள்) – 0333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். Play Audio

Kural (குறள்) – 0334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். Play Audio

Kural (குறள்) – 0336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு. Play Audio

Kural (குறள்) – 0337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. Play Audio

Kural (குறள்) – 0338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. Play Audio

Kural (குறள்) – 0339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. Play Audio

துறவு

 

Kural (குறள்) – 0341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். Play Audio

Kural (குறள்) – 0342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. Play Audio

Kural (குறள்) – 0343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு. Play Audio

Kural (குறள்) – 0344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. Play Audio

Kural (குறள்) – 0345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. Play Audio

Kural (குறள்) – 0346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும். Play Audio

Kural (குறள்) – 0347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். Play Audio

Kural (குறள்) – 0349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். Play Audio

Kural (குறள்) – 0350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. Play Audio

 

மெய்யுணர்தல்

 

Kural (குறள்) – 0351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. Play Audio

Kural (குறள்) – 0354 ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. Play Audio

Kural (குறள்) – 0356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. Play Audio

Kural (குறள்) – 0357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. Play Audio

Kural (குறள்) – 0359 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். Play Audio

Kural (குறள்) – 0360 காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய். Play Audio

 

அவாவறுத்தல்

 

Kural (குறள்) – 0361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. Play Audio

Kural (குறள்) – 0362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். Play Audio

Kural (குறள்) – 0363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல். Play Audio

Kural (குறள்) – 0364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். Play Audio

Kural (குறள்) – 0365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். Play Audio

Kural (குறள்) – 0366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. Play Audio

Kural (குறள்) – 0367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். Play Audio

Kural (குறள்) – 0368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். Play Audio

Kural (குறள்) – 0369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். Play Audio

Kural (குறள்) – 0370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். Play Audio

 

ஊழ்

 

Kural (குறள்) – 0371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. Play Audio

Kural (குறள்) – 0372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. Play Audio

Kural (குறள்) – 0373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். Play Audio

Kural (குறள்) – 0374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. Play Audio

Kural (குறள்) – 0375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. Play Audio

Kural (குறள்) – 0376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. Play Audio

Kural (குறள்) – 0377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். Play Audio

Kural (குறள்) – 0379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். Play Audio

Kural (குறள்) – 0380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். Play Audio

 

இறைமாட்சி

 

Kural (குறள்) – 0381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Play Audio

Kural (குறள்) – 0382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. Play Audio

Kural (குறள்) – 0383 தூங்காமை கல்வி துணிவுடைமைஇம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. Play Audio

Kural (குறள்) – 0385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. Play Audio

Kural (குறள்) – 0386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். Play Audio

Kural (குறள்) – 0387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.Play Audio

Kural (குறள்) – 0388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். Play Audio

Kural (குறள்) – 0389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. Play Audio

Kural (குறள்) – 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. Play Audio

 

கல்வி

 

Kural (குறள்) – 0391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. Play Audio

Kural (குறள்) – 0392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். Play Audio

Kural (குறள்) – 0394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். Play Audio

Kural (குறள்) – 0395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். Play Audio

Kural (குறள்) – 0396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Play Audio

Kural (குறள்) – 0397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. Play Audio

Kural (குறள்) – 0398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. Play Audio

Kural (குறள்) – 0399 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். Play Audio

Kural (குறள்) – 0400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. Play Audio

 

கல்லாமை

 

Kural (குறள்) – 0401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். Play Audio

Kural (குறள்) – 0402 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. Play Audio

Kural (குறள்) – 0403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். Play Audio

Kural (குறள்) – 0405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். Play Audio

Kural (குறள்) – 0406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். Play Audio

Kural (குறள்) – 0407 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. Play Audio

Kural (குறள்) – 0408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. Play Audio

Kural (குறள்) – 0409 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. Play Audio

Kural (குறள்) – 0410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். Play Audio

 

கேள்வி

 

Kural (குறள்) – 0411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. Play Audio

Kural (குறள்) – 0412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். Play Audio

Kural (குறள்) – 0413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. Play Audio

Kural (குறள்) – 0414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. Play Audio

Kural (குறள்) – 0415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். Play Audio

Kural (குறள்) – 0416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். Play Audio

Kural (குறள்) – 0417 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். Play Audio

Kural (குறள்) – 0418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. Play Audio

Kural (குறள்) – 0419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். Play Audio

 

அறிவுடைமை

 

Kural (குறள்) – 0421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். Play Audio

Kural (குறள்) – 0422 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு Play Audio

Kural (குறள்) – 0423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. Play Audio

Kural (குறள்) – 0424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. Play Audio

Kural (குறள்) – 0425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. Play Audio

Kural (குறள்) – 0426 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. Play Audio

Kural (குறள்) – 0427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். Play Audio

Kural (குறள்) – 0428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். Play Audio

Kural (குறள்) – 0429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். Play Audio

Kural (குறள்) – 0430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். Play Audio

 

குற்றங்கடிதல்

 

Kural (குறள்) – 0431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. Play Audio

Kural (குறள்) – 0432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.Play Audio

Kural (குறள்) – 0433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். Play Audio

Kural (குறள்) – 0434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. Play Audio

Kural (குறள்) – 0435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. Play Audio

Kural (குறள்) – 0437 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. Play Audio

Kural (குறள்) – 0439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. Play Audio

Kural (குறள்) – 0440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். Play Audio

 

பெரியாரைத் துணைக்கோடல்

 

Kural (குறள்) – 0441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். Play Audio

Kural (குறள்) – 0442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். Play Audio

Kural (குறள்) – 0443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். Play Audio

Kural (குறள்) – 0444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. Play Audio

Kural (குறள்) – 0445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். Play Audio

Kural (குறள்) – 0446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். Play Audio

Kural (குறள்) – 0447 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். Play Audio

Kural (குறள்) – 0448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். Play Audio

Kural (குறள்) – 0449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. Play Audio

Kural (குறள்) – 0450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். Play Audio

 

சிற்றினஞ்சேராமை

 

Kural (குறள்) – 0451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். Play Audio

Kural (குறள்) – 0452 நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. Play Audio

Kural (குறள்) – 0453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். Play Audio

Kural (குறள்) – 0454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. Play Audio

Kural (குறள்) – 0455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். Play Audio

Kural (குறள்) – 0456 மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. Play Audio

Kural (குறள்) – 0457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். Play Audio

Kural (குறள்) – 0458 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. Play Audio

Kural (குறள்) – 0459 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. Play Audio

Kural (குறள்) – 0460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். Play Audio

 

தெரிந்துசெயல்வகை

 

Kural (குறள்) – 0461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். Play Audio

Kural (குறள்) – 0462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். Play Audio

Kural (குறள்) – 0463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். Play Audio

Kural (குறள்) – 0464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். Play Audio

Kural (குறள்) – 0465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. Play Audio

Kural (குறள்) – 0466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். Play Audio

Kural (குறள்) – 0467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. Play Audio

Kural (குறள்) – 0468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். Play Audio

Kural (குறள்) – 0469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. Play Audio

Kural (குறள்) – 0470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. Play Audio

 

வலியறிதல்

 

Kural (குறள்) – 0471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். Play Audio

Kural (குறள்) – 0472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். Play Audio

Kural (குறள்) – 0473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். Play Audio

Kural (குறள்) – 0474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். Play Audio

Kural (குறள்) – 0475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். Play Audio

Kural (குறள்) – 0476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். Play Audio

Kural (குறள்) – 0477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. Play Audio

Kural (குறள்) – 0478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. Play Audio

Kural (குறள்) – 0479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். Play Audio

 

காலமறிதல்

 

Kural (குறள்) – 0481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. Play Audio

Kural (குறள்) – 0482 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. Play Audio

Kural (குறள்) – 0483 அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறந்து செயின். Play Audio

Kural (குறள்) – 0484 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். Play Audio

Kural (குறள்) – 0485 காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். Play Audio

Kural (குறள்) – 0486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. Play Audio

Kural (குறள்) – 0487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். Play Audio

Kural (குறள்) – 0488 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. Play Audio

Kural (குறள்) – 0489 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். Play Audio

Kural (குறள்) – 0490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. Play Audio

 

இடனறிதல்

 

Kural (குறள்) – 0491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. Play Audio

Kural (குறள்) – 0492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். Play Audio

Kural (குறள்) – 0493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். Play Audio

Kural (குறள்) – 0494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். Play Audio

Kural (குறள்) – 0495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. Play Audio

Kural (குறள்) – 0496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. Play Audio

Kural (குறள்) – 0497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். Play Audio

Kural (குறள்) – 0498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். Play Audio

Kural (குறள்) – 0499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. Play Audio

 

தெரிந்துதெளிதல்

 

Kural (குறள்) – 0501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். Play Audio

Kural (குறள்) – 0502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு. Play Audio

Kural (குறள்) – 0503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. Play Audio

Kural (குறள்) – 0504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். Play Audio

Kural (குறள்) – 0505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். Play Audio

Kural (குறள்) – 0506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. Play Audio

Kural (குறள்) – 0507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும். Play Audio

Kural (குறள்) – 0508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். Play Audio

Kural (குறள்) – 0509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். Play Audio

Kural (குறள்) – 0510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். Play Audio

 

தெரிந்துவினையாடல்

 

Kural (குறள்) – 0511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். Play Audio

Kural (குறள்) – 0512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. Play Audio

Kural (குறள்) – 0513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. Play Audio

Kural (குறள்) – 0514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். Play Audio

Kural (குறள்) – 0515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. Play Audio

Kural (குறள்) – 0516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். Play Audio

Kural (குறள்) – 0517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். Play Audio

Kural (குறள்) – 0518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். Play Audio

Kural (குறள்) – 0519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. Play Audio

Kural (குறள்) – 0520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. Play Audio

 

சுற்றந்தழால்

 

Kural (குறள்) – 0521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. Play Audio

Kural (குறள்) – 0522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும். Play Audio

Kural (குறள்) – 0523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. Play Audio

Kural (குறள்) – 0524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். Play Audio

Kural (குறள்) – 0525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். Play Audio

Kural (குறள்) – 0526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். Play Audio

Kural (குறள்) – 0527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. Play Audio

Kural (குறள்) – 0528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். Play Audio

Kural (குறள்) – 0529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். Play Audio

Kural (குறள்) – 0530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். Play Audio

 

பொச்சாவாமை

 

Kural (குறள்) – 0531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. Play Audio

Kural (குறள்) – 0532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. Play Audio

Kural (குறள்) – 0533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. Play Audio

Kural (குறள்) – 0534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. Play Audio

Kural (குறள்) – 0535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். Play Audio

Kural (குறள்) – 0536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். Play Audio

Kural (குறள்) – 0537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். Play Audio

Kural (குறள்) – 0538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். Play Audio

Kural (குறள்) – 0539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. Play Audio

Kural (குறள்) – 0540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். Play Audio

 

செங்கோன்மை

 

Kural (குறள்) – 0541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. Play Audio

Kural (குறள்) – 0542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி. Play Audio

Kural (குறள்) – 0543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். Play Audio

Kural (குறள்) – 0544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. Play Audio

Kural (குறள்) – 0545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. Play Audio

Kural (குறள்) – 0546 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். Play Audio

Kural (குறள்) – 0547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். Play Audio

Kural (குறள்) – 0548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். Play Audio

Kural (குறள்) – 0549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். Play Audio

Kural (குறள்) – 0550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். Play Audio

 

கொடுங்கோன்மை

 

Kural (குறள்) – 0551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. Play Audio

Kural (குறள்) – 0552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. Play Audio

Kural (குறள்) – 0553 நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். Play Audio

Kural (குறள்) – 0554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. Play Audio

Kural (குறள்) – 0555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. Play Audio

Kural (குறள்) – 0556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. Play Audio

Kural (குறள்) – 0557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். Play Audio

Kural (குறள்) – 0559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். Play Audio

Kural (குறள்) – 0560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். Play Audio

 

வெருவந்தசெய்யாமை

 

Kural (குறள்) – 0561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. Play Audio

Kural (குறள்) – 0562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். Play Audio

Kural (குறள்) – 0563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். Play Audio

Kural (குறள்) – 0567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். Play Audio

Kural (குறள்) – 0568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. Play Audio

Kural (குறள்) – 0569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். Play Audio

Kural (குறள்) – 0570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.Play Audio

 

கண்ணோட்டம்

 

Kural (குறள்) – 0571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. Play Audio

Kural (குறள்) – 0572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. Play Audio

Kural (குறள்) – 0573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். Play Audio

Kural (குறள்) – 0574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். Play Audio

Kural (குறள்) – 0575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். Play Audio

Kural (குறள்) – 0576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். Play Audio

Kural (குறள்) – 0577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். Play Audio

Kural (குறள்) – 0578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. Play Audio

Kural (குறள்) – 0579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. Play Audio

Kural (குறள்) – 0580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.Play Audio

 

ஒற்றாடல்

 

Kural (குறள்) – 0581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். Play Audio

Kural (குறள்) – 0582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். Play Audio

Kural (குறள்) – 0583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். Play Audio

Kural (குறள்) – 0584 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. Play Audio

Kural (குறள்) – 0585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. Play Audio

Kural (குறள்) – 0586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. Play Audio

Kural (குறள்) – 0587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. Play Audio

Kural (குறள்) – 0588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். Play Audio

Kural (குறள்) – 0589 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். Play Audio

Kural (குறள்) – 0590 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. Play Audio

 

ஊக்கமுடைமை

 

Kural (குறள்) – 0591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. Play Audio

Kural (குறள்) – 0592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். Play Audio

Kural (குறள்) – 0593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். Play Audio

Kural (குறள்) – 0594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. Play Audio

Kural (குறள்) – 0595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. Play Audio

Kural (குறள்) – 0596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. Play Audio

Kural (குறள்) – 0597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. Play Audio

Kural (குறள்) – 0598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. Play Audio

Kural (குறள்) – 0599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். Play Audio

Kural (குறள்) – 0600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. Play Audio

 

மடியின்மை

 

Kural (குறள்) – 0601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். Play Audio

Kural (குறள்) – 0602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். Play Audio

Kural (குறள்) – 0603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. Play Audio

Kural (குறள்) – 0604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். Play Audio

Kural (குறள்) – 0606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். Play Audio

Kural (குறள்) – 0608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். Play Audio

Kural (குறள்) – 0609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. Play Audio

 

ஆள்வினையுடைமை

 

Kural (குறள்) – 0611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். Play Audio

Kural (குறள்) – 0612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. Play Audio

Kural (குறள்) – 0613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. Play Audio

Kural (குறள்) – 0614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண். Play Audio

Kural (குறள்) – 0616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். Play Audio

Kural (குறள்) – 0617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். Play Audio

Kural (குறள்) – 0618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. Play Audio

Kural (குறள்) – 0619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். Play Audio

Kural (குறள்) – 0620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். Play Audio

 

இடுக்கணழியாமை

 

Kural (குறள்) – 0621 இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். Play Audio

Kural (குறள்) – 0622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். Play Audio

Kural (குறள்) – 0624 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். Play Audio

Kural (குறள்) – 0626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். Play Audio

Kural (குறள்) – 0627 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். Play Audio

Kural (குறள்) – 0628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். Play Audio

Kural (குறள்) – 0629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். Play Audio

Kural (குறள்) – 0630 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. Play Audio

 

அமைச்சு

 

Kural (குறள்) – 0631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. Play Audio

Kural (குறள்) – 0632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. Play Audio

Kural (குறள்) – 0633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. Play Audio

Kural (குறள்) – 0634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. Play Audio

Kural (குறள்) – 0635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. Play Audio

Kural (குறள்) – 0636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. Play Audio

Kural (குறள்) – 0637 செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். Play Audio

Kural (குறள்) – 0638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். Play Audio

Kural (குறள்) – 0639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும். Play Audio

Kural (குறள்) – 0640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். Play Audio

 

சொல்வன்மை

 

Kural (குறள்) – 0641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. Play Audio

Kural (குறள்) – 0642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. Play Audio

Kural (குறள்) – 0643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். Play Audio

Kural (குறள்) – 0644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். Play Audio

Kural (குறள்) – 0645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. Play Audio

Kural (குறள்) – 0646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். Play Audio

Kural (குறள்) – 0647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. Play Audio

Kural (குறள்) – 0648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். Play Audio

Kural (குறள்) – 0650 இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். Play Audio

 

வினைத்தூய்மை

 

Kural (குறள்) – 0651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். Play Audio

Kural (குறள்) – 0652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. Play Audio

Kural (குறள்) – 0653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். Play Audio

Kural (குறள்) – 0654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். Play Audio

Kural (குறள்) – 0655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. Play Audio

Kural (குறள்) – 0657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. Play Audio

Kural (குறள்) – 0658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். Play Audio

Kural (குறள்) – 0659 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. Play Audio

Kural (குறள்) – 0660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. Play Audio

 

வினைத்திட்பம்

 

Kural (குறள்) – 0661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. Play Audio

Kural (குறள்) – 0662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். Play Audio

Kural (குறள்) – 0663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். Play Audio

Kural (குறள்) – 0664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். Play Audio

Kural (குறள்) – 0665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். Play Audio

Kural (குறள்) – 0666 எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். Play Audio

Kural (குறள்) – 0669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. Play Audio

Kural (குறள்) – 0670 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. Play Audio

 

வினைசெயல்வகை

 

Kural (குறள்) – 0671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. Play Audio

Kural (குறள்) – 0672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. Play Audio

Kural (குறள்) – 0673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். Play Audio

Kural (குறள்) – 0674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். Play Audio

Kural (குறள்) – 0675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். Play Audio

Kural (குறள்) – 0676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். Play Audio

Kural (குறள்) – 0677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். Play Audio

Kural (குறள்) – 0678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. Play Audio

Kural (குறள்) – 0679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். Play Audio

Kural (குறள்) – 0680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. Play Audio

 

தூது

 

Kural (குறள்) – 0681 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. Play Audio

Kural (குறள்) – 0682 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. Play Audio

Kural (குறள்) – 0683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. Play Audio

Kural (குறள்) – 0684 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. Play Audio

Kural (குறள்) – 0685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. Play Audio

Kural (குறள்) – 0686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. Play Audio

Kural (குறள்) – 0687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. Play Audio

Kural (குறள்) – 0688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. Play Audio

Kural (குறள்) – 0689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன். Play Audio

Kural (குறள்) – 0690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. Play Audio

 

மன்னரைச் சேர்ந்தொழுதல்

 

Kural (குறள்) – 0691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். Play Audio

Kural (குறள்) – 0692 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். Play Audio

Kural (குறள்) – 0693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. Play Audio

Kural (குறள்) – 0694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. Play Audio

Kural (குறள்) – 0695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. Play Audio

Kural (குறள்) – 0696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். Play Audio

Kural (குறள்) – 0697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். Play Audio

Kural (குறள்) – 0698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். Play Audio

Kural (குறள்) – 0699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். Play Audio

Kural (குறள்) – 0700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். Play Audio

 

குறிப்பறிதல்

 

Kural (குறள்) – 0701 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. Play Audio

Kural (குறள்) – 0702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். Play Audio

Kural (குறள்) – 0703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். Play Audio

Kural (குறள்) – 0704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. Play Audio

Kural (குறள்) – 0705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். Play Audio

Kural (குறள்) – 0706 அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். Play Audio

Kural (குறள்) – 0707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். Play Audio

Kural (குறள்) – 0708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற. Play Audio

 

அவையறிதல்

 

Kural (குறள்) – 0711 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். Play Audio

Kural (குறள்) – 0712 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். Play Audio

Kural (குறள்) – 0713 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். Play Audio

Kural (குறள்) – 0714 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். Play Audio

Kural (குறள்) – 0715 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. Play Audio

Kural (குறள்) – 0716 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. Play Audio

Kural (குறள்) – 0717 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. Play Audio

Kural (குறள்) – 0718 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. Play Audio

Kural (குறள்) – 0719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார். Play Audio

Kural (குறள்) – 0720 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். Play Audio

 

அவையஞ்சாமை

 

Kural (குறள்) – 0721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். Play Audio

Kural (குறள்) – 0722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். Play Audio

Kural (குறள்) – 0723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். Play Audio

Kural (குறள்) – 0724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். Play Audio

Kural (குறள்) – 0725 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. Play Audio

Kural (குறள்) – 0726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். Play Audio

Kural (குறள்) – 0728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். Play Audio

Kural (குறள்) – 0729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். Play Audio

Kural (குறள்) – 0730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். Play Audio

 

நாடு

 

Kural (குறள்) – 0731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. Play Audio

Kural (குறள்) – 0732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. Play Audio

Kural (குறள்) – 0733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. Play Audio

Kural (குறள்) – 0734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. Play Audio

Kural (குறள்) – 0735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு. Play Audio

Kural (குறள்) – 0736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. Play Audio

Kural (குறள்) – 0737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. Play Audio

Kural (குறள்) – 0738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. Play Audio

Kural (குறள்) – 0739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. Play Audio

Kural (குறள்) – 0740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. Play Audio

 

அரண்

 

Kural (குறள்) – 0741 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். Play Audio

Kural (குறள்) – 0742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். Play Audio

Kural (குறள்) – 0743 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். Play Audio

Kural (குறள்) – 0744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். Play Audio

Kural (குறள்) – 0745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். Play Audio

Kural (குறள்) – 0746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். Play Audio

Kural (குறள்) – 0747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். Play Audio

Kural (குறள்) – 0748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். Play Audio

Kural (குறள்) – 0749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். Play Audio

Kural (குறள்) – 0750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். Play Audio

 

பொருள்செயல்வகை

 

Kural (குறள்) – 0751 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள். Play Audio

Kural (குறள்) – 0752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. Play Audio

Kural (குறள்) – 0753 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. Play Audio

Kural (குறள்) – 0754 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். Play Audio

Kural (குறள்) – 0755 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். Play Audio

Kural (குறள்) – 0756 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். Play Audio

Kural (குறள்) – 0757 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. Play Audio

Kural (குறள்) – 0758 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. Play Audio

Kural (குறள்) – 0759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். Play Audio

Kural (குறள்) – 0760 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. Play Audio

 

படைமாட்சி

 

Kural (குறள்) – 0761  உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. Play Audio

Kural (குறள்) – 0762 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. Play Audio

Kural (குறள்) – 0763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். Play Audio

Kural (குறள்) – 0764 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. Play Audio

Kural (குறள்) – 0765 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. Play Audio

Kural (குறள்) – 0766 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. Play Audio

Kural (குறள்) – 0767 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. Play Audio

Kural (குறள்) – 0768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். Play Audio

Kural (குறள்) – 0769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. Play Audio

Kural (குறள்) – 0770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். Play Audio

 

படைச்செருக்கு

 

Kural (குறள்) – 0771 என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். Play Audio

Kural (குறள்) – 0772 கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. Play Audio

Kural (குறள்) – 0773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. Play Audio

Kural (குறள்) – 0774 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். Play Audio

Kural (குறள்) – 0775 விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0776 விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. Play Audio

Kural (குறள்) – 0777 சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. Play Audio

Kural (குறள்) – 0778 உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். Play Audio

Kural (குறள்) – 0779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். Play Audio

Kural (குறள்) – 0780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. Play Audio

 

நட்பு

 

Kural (குறள்) – 0781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Play Audio

Kural (குறள்) – 0782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. Play Audio

Kural (குறள்) – 0784 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. Play Audio

Kural (குறள்) – 0785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.Play Audio

Kural (குறள்) – 0786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. Play Audio

Kural (குறள்) – 0787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. Play Audio

Kural (குறள்) – 0790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. Play Audio

 

நட்பாராய்தல்

 

Kural (குறள்) – 0791 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். Play Audio

Kural (குறள்) – 0793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. Play Audio

Kural (குறள்) – 0794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல். Play Audio

Kural (குறள்) – 0796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். Play Audio

Kural (குறள்) – 0797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். Play Audio

Kural (குறள்) – 0798 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். Play Audio

Kural (குறள்) – 0800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. Play Audio

 

பழைமை

 

Kural (குறள்) – 0801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. Play Audio

Kural (குறள்) – 0802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.. Play Audio

Kural (குறள்) – 0803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. Play Audio

Kural (குறள்) – 0804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். Play Audio

Kural (குறள்) – 0805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். Play Audio

Kural (குறள்) – 0806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. Play Audio

Kural (குறள்) – 0807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். Play Audio

Kural (குறள்) – 0808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். Play Audio

Kural (குறள்) – 0809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. Play Audio

Kural (குறள்) – 0810 விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். Play Audio

 

தீ நட்பு

 

Kural (குறள்) – 0811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. Play Audio

Kural (குறள்) – 0812 உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். Play Audio

Kural (குறள்) – 0813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். Play Audio

Kural (குறள்) – 0814 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. Play Audio

Kural (குறள்) – 0815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. Play Audio

Kural (குறள்) – 0816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். Play Audio

Kural (குறள்) – 0817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். Play Audio

Kural (குறள்) – 0818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். Play Audio

Kural (குறள்) – 0819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. Play Audio

Kural (குறள்) – 0820 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. Play Audio

 

கூடாநட்பு

 

Kural (குறள்) – 0821 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. Play Audio

Kural (குறள்) – 0822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். Play Audio

Kural (குறள்) – 0823 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. Play Audio

Kural (குறள்) – 0824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். Play Audio

Kural (குறள்) – 0825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. Play Audio

Kural (குறள்) – 0826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். Play Audio

Kural (குறள்) – 0827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். Play Audio

Kural (குறள்) – 0828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. Play Audio

Kural (குறள்) – 0829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. Play Audio

Kural (குறள்) – 0830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். Play Audio

 

பேதைமை

 

Kural (குறள்) – 0831 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். Play Audio

Kural (குறள்) – 0832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். Play Audio

Kural (குறள்) – 0833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். Play Audio

Kural (குறள்) – 0834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். Play Audio

Kural (குறள்) – 0835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. Play Audio

Kural (குறள்) – 0836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். Play Audio

Kural (குறள்) – 0837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. Play Audio

Kural (குறள்) – 0838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். Play Audio

Kural (குறள்) – 0839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். Play Audio

Kural (குறள்) – 0840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். Play Audio

 

புல்லறிவாண்மை

 

Kural (குறள்) – 0841 அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. Play Audio

Kural (குறள்) – 0842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். Play Audio

Kural (குறள்) – 0843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு Play Audio

Kural (குறள்) – 0845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். Play Audio

Kural (குறள்) – 0846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. Play Audio

Kural (குறள்) – 0847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. Play Audio

Kural (குறள்) – 0848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். Play Audio

Kural (குறள்) – 0849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. Play Audio

Kural (குறள்) – 0850 உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். Play Audio

 

இகல்

 

Kural (குறள்) – 0851 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். Play Audio

Kural (குறள்) – 0852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. Play Audio

Kural (குறள்) – 0853 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். Play Audio

Kural (குறள்) – 0854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். Play Audio

Kural (குறள்) – 0855 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர். Play Audio

Kural (குறள்) – 0856 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. Play Audio

Kural (குறள்) – 0857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். Play Audio

Kural (குறள்) – 0858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. Play Audio

Kural (குறள்) – 0859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. Play Audio

Kural (குறள்) – 0860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. Play Audio

 

பகைமாட்சி

 

Kural (குறள்) – 0861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. Play Audio

Kural (குறள்) – 0862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. Play Audio

Kural (குறள்) – 0863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. Play Audio

Kural (குறள்) – 0864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. Play Audio

Kural (குறள்) – 0865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. Play Audio

Kural (குறள்) – 0866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். Play Audio

Kural (குறள்) – 0867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. Play Audio

Kural (குறள்) – 0868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து. Play Audio

Kural (குறள்) – 0869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. Play Audio

 

பகைத்திறந்தெரிதல்

 

Kural (குறள்) – 0871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. Play Audio

Kural (குறள்) – 0872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. Play Audio

Kural (குறள்) – 0873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். Play Audio

Kural (குறள்) – 0874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. Play Audio

Kural (குறள்) – 0875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. Play Audio

Kural (குறள்) – 0876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். Play Audio

Kural (குறள்) – 0877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. Play Audio

Kural (குறள்) – 0878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. Play Audio

Kural (குறள்) – 0879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. Play Audio

Kural (குறள்) – 0880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். Play Audio

 

உட்பகை

 

Kural (குறள்) – 0881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். Play Audio

Kural (குறள்) – 0882 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. Play Audio

Kural (குறள்) – 0883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். Play Audio

Kural (குறள்) – 0884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும். Play Audio

Kural (குறள்) – 0885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். Play Audio

Kural (குறள்) – 0886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. Play Audio

Kural (குறள்) – 0887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. Play Audio

Kural (குறள்) – 0888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. Play Audio

Kural (குறள்) – 0889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. Play Audio

Kural (குறள்) – 0890 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. Play Audio

 

பெரியாரைப் பிழையாமை

 

Kural (குறள்) – 0891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. Play Audio

Kural (குறள்) – 0892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். Play Audio

Kural (குறள்) – 0893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. Play Audio

Kural (குறள்) – 0894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். Play Audio

Kural (குறள்) – 0895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். Play Audio

Kural (குறள்) – 0896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். Play Audio

Kural (குறள்) – 0897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். Play Audio

Kural (குறள்) – 0898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. Play Audio

Kural (குறள்) – 0899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். Play Audio

Kural (குறள்) – 0900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். Play Audio

 

பெண்வழிச்சேறல்

 

Kural (குறள்) – 0901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. Play Audio

Kural (குறள்) – 0902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். Play Audio

Kural (குறள்) – 0903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். Play Audio

Kural (குறள்) – 0904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. Play Audio

Kural (குறள்) – 0905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். Play Audio

Kural (குறள்) – 0906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். Play Audio

Kural (குறள்) – 0907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. Play Audio

Kural (குறள்) – 0908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். Play Audio

Kural (குறள்) – 0909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். Play Audio

Kural (குறள்) – 0910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். Play Audio

 

வரைவின்மகளிர்

 

Kural (குறள்) – 0911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். Play Audio

Kural (குறள்) – 0912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். Play Audio

Kural (குறள்) – 0913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று. Play Audio

Kural (குறள்) – 0914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். Play Audio

Kural (குறள்) – 0915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். Play Audio

Kural (குறள்) – 0916 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். Play Audio

Kural (குறள்) – 0917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். Play Audio

Kural (குறள்) – 0918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. Play Audio

Kural (குறள்) – 0919 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. Play Audio

Kural (குறள்) – 0920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. Play Audio

 

கள்ளுண்ணாமை

 

Kural (குறள்) – 0921  உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். Play Audio

Kural (குறள்) – 0922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார். Play Audio

Kural (குறள்) – 0923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. Play Audio

Kural (குறள்) – 0924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு. Play Audio

Kural (குறள்) – 0925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். Play Audio

Kural (குறள்) – 0926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். Play Audio

Kural (குறள்) – 0927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். Play Audio

Kural (குறள்) – 0928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். Play Audio

Kural (குறள்) – 0929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. Play Audio

Kural (குறள்) – 0930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. Play Audio

 

சூது

 

Kural (குறள்) – 0931  வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. Play Audio

Kural (குறள்) – 0932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. Play Audio

Kural (குறள்) – 0933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். Play Audio

Kural (குறள்) – 0934 சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.Play Audio

Kural (குறள்) – 0935 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். Play Audio

Kural (குறள்) – 0936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். Play Audio

Kural (குறள்) – 0937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். Play Audio

Kural (குறள்) – 0938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. Play Audio

Kural (குறள்) – 0939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். Play Audio

Kural (குறள்) – 0940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். Play Audio

 

மருந்து

 

Kural (குறள்) – 0941  மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. Play Audio

Kural (குறள்) – 0942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். Play Audio

Kural (குறள்) – 0943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. Play Audio

Kural (குறள்) – 0944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. Play Audio

Kural (குறள்) – 0945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். Play Audio

Kural (குறள்) – 0947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். Play Audio

Kural (குறள்) – 0948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். Play Audio

Kural (குறள்) – 0949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். Play Audio

Kural (குறள்) – 0950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து. Play Audio

 

குடிமை

 

Kural (குறள்) – 0951  இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. Play Audio

Kural (குறள்) – 0952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். Play Audio

Kural (குறள்) – 0953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. Play Audio

Kural (குறள்) – 0954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். Play Audio

Kural (குறள்) – 0955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. Play Audio

Kural (குறள்) – 0956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். Play Audio

Kural (குறள்) – 0957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து Play Audio

Kural (குறள்) – 0958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். Play Audio

Kural (குறள்) – 0959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். Play Audio

Kural (குறள்) – 0960 நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. Play Audio

 

மானம்

 

Kural (குறள்) – 0961  இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். Play Audio

Kural (குறள்) – 0962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். Play Audio

Kural (குறள்) – 0963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. Play Audio

Kural (குறள்) – 0964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. Play Audio

Kural (குறள்) – 0965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். Play Audio

Kural (குறள்) – 0966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. Play Audio

Kural (குறள்) – 0967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. Play Audio

Kural (குறள்) – 0968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. Play Audio

Kural (குறள்) – 0969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். Play Audio

Kural (குறள்) – 0970 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. Play Audio

 

பெருமை

 

Kural (குறள்) – 0971  ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். Play Audio

Kural (குறள்) – 0972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். Play Audio

Kural (குறள்) – 0973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். Play Audio

Kural (குறள்) – 0974 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. Play Audio

Kural (குறள்) – 0975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். Play Audio

Kural (குறள்) – 0976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. Play Audio

Kural (குறள்) – 0977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின். Play Audio

Kural (குறள்) – 0978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. Play Audio

Kural (குறள்) – 0979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். Play Audio

Kural (குறள்) – 0980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். Play Audio

 

சான்றாண்மை

 

Kural (குறள்) – 0981  கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 0982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. Play Audio

Kural (குறள்) – 0983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். Play Audio

Kural (குறள்) – 0984 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. Play Audio

Kural (குறள்) – 0985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. Play Audio

Kural (குறள்) – 0986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். Play Audio

Kural (குறள்) – 0987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. Play Audio

Kural (குறள்) – 0988 இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். Play Audio

Kural (குறள்) – 0989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். Play Audio

Kural (குறள்) – 0990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. Play Audio

 

பண்புடைமை

 

Kural (குறள்) – 0991  எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. Play Audio

Kural (குறள்) – 0992 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. Play Audio

Kural (குறள்) – 0993 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. Play Audio

Kural (குறள்) – 0994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. Play Audio

Kural (குறள்) – 0995 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. Play Audio

Kural (குறள்) – 0996 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். Play Audio

Kural (குறள்) – 0997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். Play Audio

Kural (குறள்) – 0998 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. Play Audio

Kural (குறள்) – 0999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். Play Audio

Kural (குறள்) – 1000 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று. Play Audio

 

நன்றியில்செல்வம்

 

Kural (குறள்) – 1001  வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். Play Audio

Kural (குறள்) – 1002 பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானா மாணாப் பிறப்பு. Play Audio

Kural (குறள்) – 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை. Play Audio

Kural (குறள்) – 1004 எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். Play Audio

Kural (குறள்) – 1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். Play Audio

Kural (குறள்) – 1006 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். Play Audio

Kural (குறள்) – 1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. Play Audio

Kural (குறள்) – 1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. Play Audio

Kural (குறள்) – 1009 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். Play Audio

Kural (குறள்) – 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. Play Audio

 

நாணுடைமை

 

Kural (குறள்) – 1011  கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. Play Audio

Kural (குறள்) – 1012 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. Play Audio

Kural (குறள்) – 1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. Play Audio

Kural (குறள்) – 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை. Play Audio

Kural (குறள்) – 1015 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. Play Audio

Kural (குறள்) – 1016 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். Play Audio

Kural (குறள்) – 1017 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். Play Audio

Kural (குறள்) – 1018 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. Play Audio

Kural (குறள்) – 1019 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. Play Audio

Kural (குறள்) – 1020 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று. Play Audio

 

குடிசெயல்வகை

 

Kural (குறள்) – 1021  கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். Play Audio

Kural (குறள்) – 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. Play Audio

Kural (குறள்) – 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். Play Audio

Kural (குறள்) – 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. Play Audio

Kural (குறள்) – 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். Play Audio

Kural (குறள்) – 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. Play Audio

Kural (குறள்) – 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். Play Audio

Kural (குறள்) – 1029 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.Play Audio

Kural (குறள்) – 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. Play Audio

 

உழவு

 

Kural (குறள்) – 1031  சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. Play Audio

Kural (குறள்) – 1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. Play Audio

Kural (குறள்) – 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். Play Audio

Kural (குறள்) – 1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். Play Audio

Kural (குறள்) – 1035 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். Play Audio

Kural (குறள்) – 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. Play Audio

Kural (குறள்) – 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். Play Audio

Kural (குறள்) – 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. Play Audio

Kural (குறள்) – 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். Play Audio

Kural (குறள்) – 1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். Play Audio

 

நல்குரவு

 

Kural (குறள்) – 1041  இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. Play Audio

Kural (குறள்) – 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். Play Audio

Kural (குறள்) – 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. Play Audio

Kural (குறள்) – 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். Play Audio

Kural (குறள்) – 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். Play Audio

Kural (குறள்) – 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். Play Audio

Kural (குறள்) – 1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். Play Audio

Kural (குறள்) – 1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. Play Audio

Kural (குறள்) – 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. Play Audio

Kural (குறள்) – 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. Play Audio

 

இரவு

 

Kural (குறள்) – 1051  இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. Play Audio

Kural (குறள்) – 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். Play Audio

Kural (குறள்) – 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. Play Audio

Kural (குறள்) – 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. Play Audio

Kural (குறள்) – 1055 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. Play Audio

Kural (குறள்) – 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். Play Audio

Kural (குறள்) – 1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. Play Audio

Kural (குறள்) – 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. Play Audio

Kural (குறள்) – 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. Play Audio

Kural (குறள்) – 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. Play Audio

 

இரவச்சம்

 

Kural (குறள்) – 1061  கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். Play Audio

Kural (குறள்) – 1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். Play Audio

Kural (குறள்) – 1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். Play Audio

Kural (குறள்) – 1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. Play Audio

Kural (குறள்) – 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில். Play Audio

Kural (குறள்) – 1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில். Play Audio

Kural (குறள்) – 1067 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. Play Audio

Kural (குறள்) – 1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். Play Audio

Kural (குறள்) – 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். Play Audio

Kural (குறள்) – 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். Play Audio

 

கயமை

 

Kural (குறள்) – 1071  மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். Play Audio

Kural (குறள்) – 1072 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். Play Audio

Kural (குறள்) – 1073 தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். Play Audio

Kural (குறள்) – 1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். Play Audio

Kural (குறள்) – 1075 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. Play Audio

Kural (குறள்) – 1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். Play Audio

Kural (குறள்) – 1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. Play Audio

Kural (குறள்) – 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். Play Audio

Kural (குறள்) – 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். Play Audio

Kural (குறள்) – 1080 எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. Play Audio

 

தகையணங்குறுத்தல்

 

Kural (குறள்) – 1081  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. Play Audio

Kural (குறள்) – 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. Play Audio

Kural (குறள்) – 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. Play Audio

Kural (குறள்) – 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். Play Audio

Kural (குறள்) – 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. Play Audio

Kural (குறள்) – 1086 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண். Play Audio

Kural (குறள்) – 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். Play Audio

Kural (குறள்) – 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. Play Audio

Kural (குறள்) – 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. Play Audio

Kural (குறள்) – 1090 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. Play Audio

 

குறிப்பறிதல்

 

Kural (குறள்) – 1091  இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. Play Audio

Kural (குறள்) – 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. Play Audio

Kural (குறள்) – 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். Play Audio

Kural (குறள்) – 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். Play Audio

Kural (குறள்) – 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். Play Audio

Kural (குறள்) – 1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். Play Audio

Kural (குறள்) – 1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. Play Audio

Kural (குறள்) – 1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். Play Audio

Kural (குறள்) – 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. Play Audio

Kural (குறள்) – 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. Play Audio

 

புணர்ச்சிமகிழ்தல்

 

Kural (குறள்) – 1101  கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. Play Audio

Kural (குறள்) – 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. Play Audio

Kural (குறள்) – 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. Play Audio

Kural (குறள்) – 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். Play Audio

Kural (குறள்) – 1105 வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். Play Audio

Kural (குறள்) – 1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். Play Audio

Kural (குறள்) – 1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. Play Audio

Kural (குறள்) – 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. Play Audio

Kural (குறள்) – 1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். Play Audio

Kural (குறள்) – 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. Play Audio

 

நலம்புனைந்துரைத்தல்

 

Kural (குறள்) – 1111  நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். Play Audio

Kural (குறள்) – 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. Play Audio

Kural (குறள்) – 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. Play Audio

Kural (குறள்) – 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. Play Audio

Kural (குறள்) – 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. Play Audio

Kural (குறள்) – 1116 மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். Play Audio

Kural (குறள்) – 1117 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. Play Audio

Kural (குறள்) – 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. Play Audio

Kural (குறள்) – 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. Play Audio

Kural (குறள்) – 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். Play Audio

 

காதற்சிறப்புரைத்தல்

 

Kural (குறள்) – 1121  பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். Play Audio

Kural (குறள்) – 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. Play Audio

Kural (குறள்) – 1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். Play Audio

Kural (குறள்) – 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. Play Audio

Kural (குறள்) – 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். Play Audio

Kural (குறள்) – 1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். Play Audio

Kural (குறள்) – 1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. Play Audio

Kural (குறள்) – 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து.Play Audio

Kural (குறள்) – 1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். Play Audio

Kural (குறள்) – 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். Play Audio

 

நாணுத்துறவுரைத்தல்

 

Kural (குறள்) – 1131  காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. Play Audio

Kural (குறள்) – 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. 

Kural (குறள்) – 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். 

Kural (குறள்) – 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. 

Kural (குறள்) – 1135 தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். 

Kural (குறள்) – 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். 

Kural (குறள்) – 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். 

Kural (குறள்) – 1138 நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.

Kural (குறள்) – 1139 அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. 

Kural (குறள்) – 1140 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. 

Kural- 1132-1140 Play Audio

 

அலரறிவுறுத்தல்

 

Kural (குறள்) – 1141  அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால்.

Kural (குறள்) – 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 

Kural (குறள்) – 1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 

Kural (குறள்) – 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. 

Kural (குறள்) – 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.

Kural (குறள்) – 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. 

Kural (குறள்) – 1147 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். 

Kural (குறள்) – 1148 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.

Kural (குறள்) – 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. 

Kural (குறள்) – 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். 

Kural- 1141-1150 Play Audio

 

பிரிவாற்றாமை

 

Kural (குறள்) – 1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.

Kural (குறள்) – 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.

Kural (குறள்) – 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். 

Kural (குறள்) – 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.

Kural (குறள்) – 1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.

Kural (குறள்) – 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. 

Kural (குறள்) – 1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.

Kural (குறள்) – 1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.

Kural (குறள்) – 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 

Kural (குறள்) – 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். 

Kural- 1151-1160 Play Audio

 

படர்மெலிந்திரங்கல்

 

Kural (குறள்) – 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.

Kural (குறள்) – 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.

Kural (குறள்) – 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.

Kural (குறள்) – 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல்.

Kural (குறள்) – 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.

Kural (குறள்) – 1166 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. 

Kural (குறள்) – 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.

Kural (குறள்) – 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை.

Kural (குறள்) – 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடிய கழியும் இரா. 

Kural (குறள்) – 1170 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். 

Kural- 1161-1170 Play Audio

 

கண்விதுப்பழிதல்

 

Kural (குறள்) – 1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.

Kural (குறள்) – 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்.

Kural (குறள்) – 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.

Kural (குறள்) – 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

Kural (குறள்) – 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.

Kural (குறள்) – 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. 

Kural (குறள்) – 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்.

Kural (குறள்) – 1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.

Kural (குறள்) – 1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். 

Kural (குறள்) – 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. 

Kural- 1171-1180 Play Audio

 

பசப்புறுபருவரல்

 

Kural (குறள்) – 1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.

Kural (குறள்) – 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.

Kural (குறள்) – 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.

Kural (குறள்) – 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.

Kural (குறள்) – 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது.

Kural (குறள்) – 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 

Kural (குறள்) – 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

Kural (குறள்) – 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்.

Kural (குறள்) – 1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.

Kural (குறள்) – 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். 

Kural- 1181-1190 Play Audio

 

தனிப்படர்மிகுதி

 

Kural (குறள்) – 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.

Kural (குறள்) – 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.

Kural (குறள்) – 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.

Kural (குறள்) – 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.

Kural (குறள்) – 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.

Kural (குறள்) – 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.

Kural (குறள்) – 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.

Kural (குறள்) – 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.

Kural (குறள்) – 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.

Kural (குறள்) – 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Kural- 1191-1200 Play Audio

 

நினைந்தவர்புலம்பல்

 

Kural (குறள்) – 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.

Kural (குறள்) – 1202 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.

Kural (குறள்) – 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.

Kural (குறள்) – 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்.

Kural (குறள்) – 1205 தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Kural (குறள்) – 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்.

Kural (குறள்) – 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.

Kural (குறள்) – 1208 எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.

Kural (குறள்) – 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.

Kural (குறள்) – 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.

Kural- 1201-1210 Play Audio

 

கனவுநிலையுரைத்தல்

 

Kural (குறள்) – 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.

Kural (குறள்) – 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.

Kural (குறள்) – 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

Kural (குறள்) – 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.

Kural (குறள்) – 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.

Kural (குறள்) – 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.

Kural (குறள்) – 1217 நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது.

Kural (குறள்) – 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

Kural (குறள்) – 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.

Kural (குறள்) – 1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.

Kural- 1211-1220 Play Audio

 

பொழுதுகண்டிரங்கல்

 

Kural (குறள்) – 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.

Kural (குறள்) – 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.

Kural (குறள்) – 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.

Kural (குறள்) – 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

Kural (குறள்) – 1225 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.

Kural (குறள்) – 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.

Kural (குறள்) – 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.

Kural (குறள்) – 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.

Kural (குறள்) – 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.

Kural (குறள்) – 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.

Kural- 1221-1230 Play Audio

 

உறுப்புநலனழிதல்

 

Kural (குறள்) – 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.

Kural (குறள்) – 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.

Kural (குறள்) – 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.

Kural (குறள்) – 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.

Kural (குறள்) – 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.

Kural (குறள்) – 1236 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.

Kural (குறள்) – 1237 பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.

Kural (குறள்) – 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.

Kural (குறள்) – 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

Kural (குறள்) – 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.

Kural- 1231-1240 Play Audio

 

நெஞ்சொடுகிளத்தல்

 

Kural (குறள்) – 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Kural (குறள்) – 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு.

Kural (குறள்) – 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.

Kural (குறள்) – 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.

Kural (குறள்) – 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.

Kural (குறள்) – 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

Kural (குறள்) – 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.

Kural (குறள்) – 1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

Kural (குறள்) – 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு.

Kural (குறள்) – 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.

Kural- 1241-1250 Play Audio

 

நிறையழிதல்

 

Kural (குறள்) – 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Kural (குறள்) – 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.

Kural (குறள்) – 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.

Kural (குறள்) – 1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.

Kural (குறள்) – 1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.

Kural (குறள்) – 1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.

Kural (குறள்) – 1257 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்.

Kural (குறள்) – 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.

Kural (குறள்) – 1259 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.

Kural (குறள்) – 1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

Kural- 1251-1260 Play Audio

 

அவர்வயின்விதும்பல்

 

Kural (குறள்) – 1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.

Kural (குறள்) – 1262 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து.

Kural (குறள்) – 1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்.

Kural (குறள்) – 1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு.

Kural (குறள்) – 1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Kural (குறள்) – 1266 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.

Kural (குறள்) – 1267 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன்.

Kural (குறள்) – 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து.

Kural (குறள்) – 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

Kural (குறள்) – 1270 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.

Kural- 1261-1270 Play Audio

 

குறிப்பறிவுறுத்தல்

 

Kural (குறள்) – 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Kural (குறள்) – 1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.

Kural (குறள்) – 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.

Kural (குறள்) – 1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

Kural (குறள்) – 1275 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

Kural (குறள்) – 1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.

Kural (குறள்) – 1277 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.

Kural (குறள்) – 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.

Kural (குறள்) – 1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது.

Kural (குறள்) – 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.

Kural- 1271-1280 Play Audio

 

புணர்ச்சிவிதும்பல்

 

Kural (குறள்) – 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Kural (குறள்) – 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்.

Kural (குறள்) – 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.

Kural (குறள்) – 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

Kural (குறள்) – 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து.

Kural (குறள்) – 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை.

Kural (குறள்) – 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.

Kural (குறள்) – 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.

Kural (குறள்) – 1289 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.

Kural (குறள்) – 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.

Kural- 1281-1290 Play Audio

 

நெஞ்சொடுபுலத்தல்

 

Kural (குறள்) – 1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

Kural (குறள்) – 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Kural (குறள்) – 1293 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.

Kural (குறள்) – 1294 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Kural (குறள்) – 1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Kural (குறள்) – 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.

Kural (குறள்) – 1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு.

Kural (குறள்) – 1298 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Kural (குறள்) – 1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி.

Kural (குறள்) – 1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.

Kural- 1291-1300 Play Audio

 

புலவி

 

Kural (குறள்) – 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

Kural (குறள்) – 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

Kural (குறள்) – 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

Kural (குறள்) – 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.

Kural (குறள்) – 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.

Kural (குறள்) – 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

Kural (குறள்) – 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று.

Kural (குறள்) – 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.

Kural (குறள்) – 1309 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.

Kural (குறள்) – 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

Kural- 1301-1310 Play Audio

 

புலவி நுணுக்கம்

 

Kural (குறள்) – 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

Kural (குறள்) – 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Kural (குறள்) – 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

Kural (குறள்) – 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

Kural (குறள்) – 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

Kural (குறள்) – 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

Kural (குறள்) – 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

Kural (குறள்) – 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

Kural (குறள்) – 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

Kural (குறள்) – 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

Kural- 1311-1320 Play Audio

 

ஊடலுவகை

 

Kural (குறள்) – 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.

Kural (குறள்) – 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.

Kural (குறள்) – 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.

Kural (குறள்) – 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.

Kural (குறள்) – 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Kural (குறள்) – 1326 உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

Kural (குறள்) – 1327 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.

Kural (குறள்) – 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.

Kural (குறள்) – 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.

Kural (குறள்) – 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

Kural- 1321-1330 Play Audio