Abirami Anthadhi

Presenter: Smt. Mahalakshmi Senthilkumar (Parasakthi Family Member)

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

 
Ganapathi KAppu

ThAramar Kondraiyum Senbaga MAlaiyum SAtthum Thillai
Oorar atham PAgatthu Uma Maindhane !Ulagezhum Pettra
Seer AbirAmi AndhAdhi Eppodhum En Sindhaiyulle
KAramar Meni Ganapathiye ! Nirkka Katturaiye.
 
Play Audio
Verse # 1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.

 
Udhikkindra Senkadhir Ucchithilagam Unarvudoiyor
Madhikkindra MAnickamMAdhulam Podhu MalarkKamalai
Thudhikkindra Minkodi Menkadik Kunguma Thoyam Enna
Vidhikkindra Meni AbirAmi Endran Vizhutthunaiye.
 
Play Audio
Verse # 2

 

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

 
Thunaiyum Thozhum Dheivamum Pettra Thaayum Surudhigalin
Panaiyum Kozhundhum Padhi Konda Verum Panimalar
Poonkanaiyum Karuppucchilaiyum VenPAsAngusamum Kaiyil
Anaiyum ThiripuraSundari Aavadhu Arindhaname.
 
Play Audio
Verse # 3
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே.

 
Arinthen Evarum Ariyaa Maraiyai, Arinthukondu
Serinthen, Unadhu Thiruvadikke Thiruve! Veruvip
PirinthEn, Nin Anbar Perumai EnnAdha karuma NenjAl,
MarindhE Vizhu Naragukku UravAya Manidharaiye.
 
Play Audio
Verse # 4
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 
Manidharum, Thevarum, MAyA Munivarum, vandhu, Senni
Kunidharum Sevadik Komalame! KondraivAr Sadaimel
Panitharum Thingalum, PAmbum, Bhageeradhiyum Padaittha,
Punidharum Neeyum En Pundhi EnNaalum Porundhugave.
 
Play Audio
Verse # 5
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

 
Porundhiya Muppurai, Seppurai Seyyum Punar MulaiyAL,
Varundhiya Vanji Marungul Manonmani, Vaar Sadaiyon
Arundhiya Nanju AmudhAkkiya Ambigai, AmbuyamEl
Thirundhiya Sundaree, Anthari-pAdham En Senniyathe.
 
Play Audio
Verse # 1-5
 
Play Audio
Verse # 6
சென்னியது, உன் பொற் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

 
Senniyadhu, Un por Thiruvadith ThAmarai ! Sindhaiyulle
Manniyadhu, Un ThiruMandhiram; Sindhura Vannappenne!
MunniyaNin AdiyArudan Koodi, Murai Muraiye
Panniyadhu, Enrum Undhan ParamAgama Patthadhiye.
 
Play Audio
Verse # 7
ததியுறு மத்தில், சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே!

 
Thadhiyuru Matthil Suzhalum En Aavi, Thalarviladhor
Kadhiyuruvannam Karudhu KandAi-KamalAlayanum,
MadhiyuruVeni Magizhnanum, MAlum, Vanangi, Enrum
Thudhiyuru SevadiyAi! SindhurAnana Sundhariye!
 
Play Audio
Verse # 8
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே.

 
Sundhari Endhai Thunaivi, En PAsaththodarai EllAm
Vandhu Ari Sindhura VannatthinAl, Magidan Thalaimel
Anthari, Neeli, AzhiyAdha Kannigai, Aranatthon
Kanthari kaitthalatthAl-MalartthAl En Karutthanave.
 
Play Audio
Verse # 9
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

 
Karutthana Endhaithan Kannana, Vannak Kanagaverpil
Perutthana,PAl Azhum Pillaikku Nalgina, Per Arulkoor
Thirutthana BhAramum; Aramum, Sengai Silaiyum, Ambum,
Murutthana Mooralum, Neeyum, Amme! Vandhu Enmun Nirkkave.
 
Play Audio
Verse # 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே.

 
Ninrum Irundhum Kidandhum Nadandhum Ninaippadhu Unnai,
Enrum Vananguvadhu Un MalartthAl! EzhudhA Maraiyin
Onrum Arum Porule! Arule! Umaiye! Imayath
thandrum Pirandhavale! AzhiyA Mutthi Anandhame!
 
Play Audio
Verse # 6 – 10
 
Play Audio
Verse # 11
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

 
AnandhamAi, En ARivAi, Niraindha AmudhamumAi,
VAn AndhamAna VadivudaiyAl, Marai NAnginukkum
ThAn AndhamAna, CharanAravindhamThavala nirak
KAnam Tham AdarangAm EmpirAn Mudik Kanniyadhe.
 
Play Audio
Verse # 12
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே.

 
Kanniyadhu Un Pugazh, Karppadhu Un NAmam, Kasindhu Bhakthi
Panniyadhu Un Iru Paadhaampuyaththil, Pagal IravA
Nanniyadhu Unnai Nayandhor Avaiyatthu-NAn Mun Seidha
Punniyam Ethu? En Amme! Puvi Ezhaiyum pootthavale!
 
Play Audio
Verse # 13
பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

 
Pootthavale! Bhuvanam PathinAngaiyum Pootthavannam
Katthavale! Pin Karandhavale! Karaikkandanukku
Mooththavale! Endrum MoovA Mukuntharkku Ilaiyavale!
MAtthavale! Unnai Andri Mattror Dheivam Vandhippadhe.
 
Play Audio
Verse # 14
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண் அளியே.

 
Vandhippavar Unnai, VAnavar DhAnavar Anavargal,
Sindhippavar, Nattrisaimugar NAranar; Sindhai Ulle
Pandhippavar, AzhiyAp ParamAnandhar; PAril Unnai
Sindhippavarkku ElidhAm EmpirAtti ! Nin ThannAliye.
 
Play Audio
Verse # 15
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார், மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

 
Thannalikku Endru, Munne Pala Kodi Thavangal SeivAr,
Mann Alikkum Selvamo PeruvAr, Madhi VAnavar thamm
Vinn Alikkum Selvamum AzhiyA Mutthi veedum, Andro?
Pann Alikkum Sol Parimala YAmalaip Painkiliye.
 
Play Audio
Verse # 11 – 15
 
Play Audio
Verse # 16
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

 
Kiliye, Kilaigjnar ManatthE Kidandhu Kilarndhu Olirum
Oliye, Olirum Olikkidame, Ebnil Ondrum Illaa
VEliye, Veli Mudhal Bhoodhangalaagi Virindha Amme!
Aliyen Arivalavirkku AlavAnadhu Adhisayame.
 
Play Audio
Verse # 17
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி ஜயமானது அபஜயம் ஆக, முன் பார்த்தவர் தம்
மதி ஜயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே.

 
AdhisayamAna VadivudaiyAl, Aravindham EllAm
Thudhisaya Aanana Sundharavalli, Thunai Iradhi
pathi JayamAnadhu Abajayam Aaga mun Parththavar ttham
madhi Jayam Aaga Andro, VAma PAgatthai Vavviyadhe.
 
Play Audio
Verse # 18
வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே!
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

 
Vavviya PAgatthiraivarum Neeyum Magizhndhirukkum
Sevviyum, Ungal Thirumanak Kolamum, Sindhaiyulle!
Avviyam Theertthu Ennai Aanda PorPAdhamum Agivandhu-
Vevviya kAlan Enmel Varumpodhu-Veli Nirkkave!
 
Play Audio
Verse # 19
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுள்ளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

 
Velinindra Nin Thirumeniyaip PArththu, En Vizhiyum Nenjum
Kalinindra Vellam Karai Kandadhillai, Karuththinulle
Thelingindra GjnAnam Thigazhgindradhu Enna Thiru Ullamo?
Olinindra Konangal Onbadhum Mevi Uraibavale.
 
Play Audio
Verse # 20
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 
Uraigindra Nin Thirukkoyil-Nin Kelvar Oru Pakkamo,
Araigindra NAn Maraiyin Adiyo Mudiyo, Amudham
Niraigindra Ven Thingalo, Kanjamo, Endhan Nenjagamo,
Maraigindra Vaarithiyo? PooranAchala Mangalaiye.
 
Play Audio
Verse # 16 – 20
 
Play Audio
Verse # 21
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கலை செங்கை, சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

 
Mangalai, Senkalasam MulaiyAl,MalaiyAl, Varuna
Sangalai Sengai SakalakalA Mayil ThAvu Gangai
Pongu Alai Thangum Purisadaiyon PudaiyAl, UdaiyAl
Pingalai, Neeli, SeyyAl, VeliyAl, Pasum Penkodiye.
 
Play Audio
Verse # 22
கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

 
Kodiye, Ilavanjik Kombe, Enakku Vambe Pazhuttha
Padiye, Maraiyin Parimalame, PanimAl Imayap
Pidiye, Biraman MudhalAya Devaraip Pettra Amme!
Adiyen Irandhu Ingu Inip PiravAmal Vandhu Andu Kolle
 
Play Audio
Verse # 23
கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.

 
Kollen, Manatthil Nin Kolam AllAdhu, Anbar Koottanthannai
Villen, Parasamayam Virumben, Viyan Moovulagukkulle,
Anaitthinukkum PurambE, Ullatthe Vilaindha
Kalle, Kalikkunkaliye, Aliya En Kanmaniye!
 
Play Audio
Verse # 24
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே,
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

 
Maniye, Maniyin Oliye, Olirum Mani Punaindha
Aniye, Aniyum Anikkazhage, AnugAdhavarkkup Piniye,
Pinikku Marundhe, Amarar Peru Virundhe!
Paniyen, Oruvarai Nin Padma PAdham Panindhapinne.
 
Play Audio
Verse # 25
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

 
Pinne Thirindhu, Un AdiyAraip Peni, Pirapparukka,
Munne Thavangal Muyandru Konden, Mudhal Moovarukkum
Anne! Ulagukku Abiraami Ennum Arumarundhe!
Enne? Ini Unnai YAn MaravAmal Nindru Etthuvane.
 
Play Audio
Verse # 21 – 25
 
Play Audio
Verse # 26
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே. மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.

 
Etthum Adiyavar, Eerezh Ulaginaiyum Padaitthum
KAtthum Azhitthum ThiribavarAm, Kamazh Poonkadambu
Saatthum Kuzhal Anange! Manam NArum Nin ThAlinaikku En
NAtthangu Punmozhi EriyavAru, Nagaiyudaitthe.
 
Play Audio
Verse # 27
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி! நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

 
Udaitthanai Vanjap Piraviyai, Ullam Urugum Anbu
Padaitthanai, Padma Padhayugam Soodum Pani Enakke
Adaiththanai, Nenjatthu AzhukkaiyellAm Nin ArutpunalAl
Thudaitthanai, Sundharee Nin Arul Edhendru Solluvadhe.
 
Play Audio
Verse # 28
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்,
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே, அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

 
Sollum porulum Ena, Nadam Adum Thunaivarudan,
Pullum Parimalap Poonkodiye! Nin PudhumalarthAl
Allum Pagalum Thozhumavarkke AzhiyA Arasum
Sellum Thavaneriyum, Sivalogamum Siddhikkume.
 
Play Audio
Verse # 29
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும்,
சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முக்தியும், முக்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

 
Siddhiyum Siddhi Tharum Dheivam Agith Thikazhum ParASakthiyum,
Sakthi Thazhaikkum Sivamum, Thavam MuyalvAr
Mukthiyum, Mukthikku Vitthum, VitthAgi Mulaitthezhundha
Buddhiyum, Buddhiyinulle Purakkum Puratthai Andre.
 
Play Audio
Verse # 30
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே வீழினும், கரையேற்றுகை நின் திருவுள்ளமே!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.

 
Andre Thadutthu Ennai AnduKondAi, Kondadhalla EnKai
Nandre Unakku? Ini NAn En Seyyinum Nadukkadalul
Sendre Veezhinum, Karaiyettrugai Nin Thiruvullame!
Ondre Pala Uruve, Aruve, En Umaiyavale.
 
Play Audio
Verse # 26 – 30
 
Play Audio
Verse # 31
உமையும் உமையொரு பாக௫ம், ஏக உருவில் வந்து, இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார்,
இனி எண்ணுதற்குச்சமையங்களும் இல்லை,
ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.

 
Umaiyum Umaiyoru Paagarum, Ega Uruvil Vandhu, Ingu
Emaiyum Thamakku Anbu SeyyavaitthAr, Ini Ennudharkku
Samaiyangalum Illai, EendreduppAl Oru ThAyum Illai,
Amaiyum Amaiyuru Tholiyar Mel Vaittha Aasaiyume.
 
Play Audio
Verse # 32
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.

 
Aasaik Kadalil Agappattu, Arulattra Andhagan Kaip
PAsatthil Allalpada Irundhenai, Nin PAdham Enum
VAsak Kamalam Thalaimel Valiya Vaitthu, Aandu Konda
Nesatthai En Solluven? Easar PAgatthu Nerizhaiye.
 
Play Audio
Verse # 33
இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய்.அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

 
Izhaikkum Vinaivazhiye Adum KAlan, Enai Nadunga
Azhaikkum Pozhudhu Vabndhu, Anjal EnbAi. Atthar Chittham EllAm
Kuzhaikkum Kalabak Kuvimulai YAmalaik Komalame!
Uzhaikkum Pozhudhu, Unnaiye Annaiye Enban Odivandhe.
 
Play Audio
Verse # 34
வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே, பரிவொடு தான் போய் இருக்கும்-சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கற் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

 
Vandhe Charanam Pugum AdiyArukku, VAnulagam
Thandhe, Parivodu ThAn Poi Irukkum-Chathurmugamum,
Paindhen Alangar Parumani Aagamum, PAgamum, Por
Senthen Malarum, Alar Kadhir GnjAyirum, Thingalume.
 
Play Audio
Verse # 35
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்-
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட்பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

 
Thinkat Pagavin Manam NArum Seeradi Senni Vaikka
Enkatku Oru Thavam EydhiyavA, EN Irandha Vinnor-
Thankatkum Indhath Thavam Eydhumo? Tharangak Kadalul
Venkat Pani Anaimel Thuyilkoorum Vizhupporule.
 
Play Audio
Verse # 31 – 35
 
Play Audio
Verse # 36
பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
அருளே, அருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

 
Porule, Porul Mudikkum Bogame, Arum Bogam Seyyum
Arule, Arulil Varum Therule, En Manatthu Vanjatthu
Iruledhum Inri Oli Veli Aagi Irukkum Undhan
Arul Edhu- Arigindrilen, AmbuyAdhanatthu Ambikaiye.
 
Play Audio
Verse # 37
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,
எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

 
Kaikke Anivadhu Kannalum Poovum, Kamalam Anna
Meikke Anivadhu Ven MutthumAlai, Vida Aravin,
Paikke Anivadhu Panmanik Kovaiyum Pattum,
Ettutthikke Aniyum Thiru UdaiyAnidam Serbavale.
 
Play Audio
Verse # 38
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனை
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

 
Pavalak Kodiyil Pazhuttha SevvAyum, Panimuruval
Thavalath Thiru Nagaiyum ThunaiyA, Engal Sankaranai
Thuvalap Porudhu, Thudiyidai SAikkum Thunai MulaiyAl-
Avalaip Panimin Kandeer, AmarAvathi Alugaikke.
 
Play Audio
Verse # 39
ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

 
Aalugaikku, Undhan AditthAmaraigal Undu; AdhaganpAl
Meelugaikku, Undhan Vizhiyin kadai Undu, Mel Ivattrin
Moolugaikku, En Kurai, Nin Kuraiye Andru-Muppurangal
MAlugaikku, Ambu Thoduttha VillAn, Pangil VAnudhale.
 
Play Audio
Verse # 40
வாணுதற்-கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்,
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்-அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.

 
VAnudhar-Kanniyai, Vinnavar YAvarum Vandhu Irainjip
Penudharkku Enniya EmperumAttiyai, Pedhai Nenjil
KAnudharku Anniyal AllAdha Kanniyai, KAnum-Anbu
Poonudharku Enniya Ennam Andro, Mun Sei Punniyame.
 
Play Audio
Verse # 36 – 40
 
Play Audio
Verse # 41
புண்ணியம் செய்தனமே-மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

 
Punniyam Seidhaname-Maname, Pudhup Poonkuvalaik
Kanniyum Seyya Kanavarum Koodi, Nam KAranatthAl
Nanni Inge Vandhu Tham AdiyArgal Nadu Irukkap
Panni, Nam Senniyin Mel Padhma PAdham Padhitthidave.
 
Play Audio
Verse # 42
இடம்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி,இளகி,
முத்து பதங்கொண்ட கொங்கை-மலைகொண்டு,
இறைவர் வலிய நெஞ்சை நடம்கொண்ட கொள்கை,நலம் கொண்ட நாயகி,
நல் அரவின் படம் கொண்ட அல்குல் பணிமொழி-வேதப் பரிபுரையே.

 
Idankondu Vimmi, Inaikondu Irugi,
Ilagi, Mutthu Padamkonda Kongai-malaikkondu,
Iraivar Valiya Nenjai Nadam konda Kolgai,Nalam Konda NAyaki,
Nal Aravin Vadam Konda Algul Panimozhi-Vedhap Paripuraiye.
 
Play Audio
Verse # 43
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை,
எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

 
Paripura Seeradip PAsAngusai, PanchapAni, Insol
Thiripura Sundhari, Sindhura Meniyal, Theemai Nenjil
Puripara, Vanjarai Anjak Kuni Poruppuch Silaikkai,
Eripurai Meni, Iraivar SempAgatthu Irundhavale.
 
Play Audio
Verse # 44
தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவ௫க்கும் மேலை இறைவியுமாம்,
துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

 
Thavale Ival Engal SankaranAr Manai MangalamAm
Avale, Avarthamakku Annaiyum Ayinal, AgaiyinAl,
Ivale Kadavular YAvarukkum Melai IraiviyumAm,
Thuvalen Ini Oru Dheivam UndAga Meithondu Seidhe.
 
Play Audio
Verse # 45
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால், அது கைதவமோ அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.

 
Thondu SeiyAdhu Nin PAdham ThozhAdhu, Thunindhu Icchaiye
Pandu SeidhAr Ularo, Ilaro? Apparisu Adiyen
Kandu SeidhAl, Adhu Kaithavamo Andri SeithavamO?
Mindu SeidhAlum Porukkai Nandre, Pin Verukkai Andre.
 
Play Audio
Verse # 41 – 45
 
Play Audio
Verse # 46
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே,புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.

 
Verukkum ThagaimaigaL Seyyinum, Tham AdiyArai Mikkor,
Porukkum Thagaimai Pudhiyathu Andre, Pudhu Nanjai Undu
Karukkum ThirumidattrAn IdappAgam Kalandha Ponne,
Marukkum ThagaimaigaL Seyyinum, YAnunnai VAzhtthuvane.
 
Play Audio
Verse # 47
வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

 
VAzhumpadi Ondru Kandu Konden, Manatthe Oruvar
Veezhumpadi Andru, Villumpadi Andru, Velai Nilam
Ezhum, Paru Varai Ettum, EttAmal Iravu Pagal
Soozhum Sudarkku Naduve Kidandhu Sudargindradhe.
 
Play Audio
Verse # 48
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ!
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

 
Sudarum Kalaimathi Thundrum Sadaimudik Kundril Ondrip
Padarum Parimalap Pacchaik Kodiyaip Padhitthu Nenjil
Idarum Thavirtthu ImaippodhiruppAr, Pinnum Eidhuvaro!
Kudarum Kozhuvum Kurudhiyum Thoyum Kurambaiyile.
 
Play Audio
Verse # 49
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.

 
Kurambai Adutthu Kudipukka Aavi, Venkoottrukkitta
Varambai adutthu Marugum Appodhu, Valaikkai Amaitthu,
Arambai Aduttha, Arivaiyar Soozha Vandhu, Anjal EnbAi
Narambai Aduttha Isai VadivAi Nindra NAyagiye.
 
Play Audio
Verse # 50
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி ௨டையாள் சரணம்-அரண் நமக்கே.

 
NAyagi, NAnmuki, NArAyaNi, Kai Nalina Pancha
SAyaki, SAmbavi, Sankari, SAmaLai, SAdhi Nacchu
VAi, Agi MAlini, VArAhi, Soolini, MAthangi,
EndrAya KiyAthi UdaiyAl SaraNam-Aran Namakke.
 
Play Audio
Verse # 46 – 50
 
Play Audio
Verse # 51
அரணம் பொருள் என்று அருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்,
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே!
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்,
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

 
Aranam Porul Endru, Arul OndrilAdha Asurar Thangal
Muran Andru Azhiya Munindha PemmAnum, Mukundhanume!
Charanam Charanam ena Nindra NAyagi Than AdiyAr,
Maranam Piravi Irandum EidhAr, Indha Vaiyagatthe.
 
Play Audio
Verse # 52
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு, உளவாகிய சின்னங்களே.

 
Vaiyam, Thuragam, Madhakari, MAmakutam, Sivikai,
Peyyum Kanagam, Peruvilai Aram, Pirai Mudittha
Aiyyan ThirumanaiyAl AditthAmaraikku, Anbu Munbu
Seyyum ThavamudaiyArkku UlavAgiya Sinnangale.
 
Play Audio
Verse # 53
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

 
Sinnansiriya Marunginil SAtthiya Seyya Pattum,
Pennam Periya Mulaiyum, MutthAramum, Picchi Moittha
Kannankariya Kuzhalum,Kan Moondrum, Karutthil Vaitthu
Thannanthani IruppArkku,Idhu Polum Thavam Illaiye.
 
Play Audio
Verse # 54
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பாற்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

 
IllAmai Solli, Oruvar ThampAr Sendru, Izhivupattu
NillAmai Nenjil Ninaikuvirel, Nittham Needu Thavam
KallAmai Kattra Kayavar ThampAl Oru KAlatthilum
SellAmai Vaittha Thiripurai PAdhangaL Sermingale.
 
Play Audio
Verse # 55
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடுஎங்குமாய், முடிவாய முதல்விதன்னை,
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது, ஒன்றில்லையே.

 
MinnAyiram Oru Mei VadivAgi Vilangugindradh
AnnAl, Agamagizh Anandhavalli, Arumaraikku
MunnAi, Nadu EngumAi, MudivAya Mudhalvithannai
UnnAdhu Ozhiyinum, Unninum, Venduvadhu Ondrillaiye.
 
Play Audio
Verse # 51 – 55
 
Play Audio
Verse # 56
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

 
OndrAi Arumbi, PalavAi Virindhu, IvvulagengumAi
NindrAl, Anaitthaiyum Neengi NirpAl-Endhan Nenjinulle
pondrAdhu Nindru PurigindravA! Ipporul ArivAr-
Andru Aililaiyil Thuyindra PemmAnum, En Aiyyanume.
 
Play Audio
Verse # 57
ஐயன் அளந்தபடி, இருநாழி கொண்டு, அண்டமெல்லாம்
உய்ய, அறம்செய்யும் உன்னையும் போற்றி, ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே.

 
Ayyan Alandhapadi, Iru NAzhi Kondu, Andam EllAm
Uyya, Aram Seyyum Unnaiyum Pottri, Oruvar ThampAl
Seyya, Pasunthamizh PAmAlaiyum Kondu Sendru,
Poyyum Meyyum IyambavaitthAi,Idhuvo, Undhan Meyyarule.
 
Play Audio
Verse # 58
அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

 
ArunAmbuyatthum, En ChitthAmbuyatthum Amarnndhirukkum
TharunAmbuyamulai Thaiyyal NallAL, Thagai Ser Nayanak
KarunAmbuyamum, VadhanAmbuyamum, KArAmbuyamum,
CharanAmbuyamum, AllAl Kandilen,Oru Thanjamume.
 
Play Audio
Verse # 59
தஞ்சம் பிறிதில்லை, ஈதல்லதென்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும், இக்கலராக நின்றாய், அறியார் எனினும்,
பஞ்சஞ்சும் மெல்லடியார், அடியார் பெற்ற பாலரையே.

 
Thanjam Piridhillai Eedhilladhendru,Un Thava Nerikke
Nenjam Payila Ninaikkindrilen,Ottrai Neel Silaiyum
Anjambum Ikkalaraaga NindrAi,AriyAr Eninum
Panchanjum Mel AdiyAr,AdiyAr Pettra PAlaraiye.
 
Play Audio
Verse # 60
பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க,
மாலினும் தேவர் வணங்கநின்றோன், கொன்றை வார்சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும், மெய்ப்பீடம் ஒரு
நாலினும், சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே.

 
Palinum Soll IniyAi, Pani MA Malarp PAdham Vaikka-
MAlinum, Dhevar Vananga Nindron KondraivAr Sadaiyin
Melinum, Keezhnindru Vedhangal PAdum Meip peedam Oru
NAlinum, SAla Nandro-Adiyen Mudai NAith Thalaiye.
 
Play Audio
Verse # 56 – 60
 
Play Audio
Verse # 61
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய், என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

 
NAyenaiyum Ingu Oru PorulAga Nayandhu Vandhu,
Neeye Ninaivindri Aandu KondAi, Ninnai Ullavannam
Peyen Ariyum Arivu ThandhAi, Enna Peru Pettren?
ThAye! Malaimagale! SenganmAl Thiru Thangacchiye.
 
Play Audio
Verse # 62
தங்கச்சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட்-கரி-உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

 
Thangach Chilai Kondu, DhAnavar Muppuram SAitthu,
Madha Venkat-kari-uri Porttha Senchevagan Meyyadaiyak
Kongaik Kurumbaik Kuriyitta NAyagi, Koganaga
Sengaik Karumbum, Alarum, Eppodhum En Sindhaiyadhe.
 
Play Audio
Verse # 63
தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும்பொருள், குன்றில்கொட்டும் தறி, குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய், இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

 
Therumpadi Sila Edhuvum KAtti,Mun Selgadhikkuk
Koorum Porul, Kundril Kottum Thari Kurikkum-Samayam
Aarum Thalaivi IvalAi Iruppadhu Arindhirundhum,
Verum Samayam Undendru KondAdiya Veenarukke.
 
Play Audio
Verse # 64
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கே அன்பு பூண்டு கொண்டேன், நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன், இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

 
Veene Bali Kavar DheivangalpAr Sendru, Mikka Anbu
Poonen, Unakke Anbu Poondukonden, Ninpugazhcchi Andrip
Penen, Oru Pozhudhum, ThirumEni PrakAsam Andrik
KAnen, Iru Nilamum Dhisai NAngum Gaganamume.
 
Play Audio
Verse # 65
ககனமும், வானும், புவனமும் காண விற்காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும்
செம்முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய, மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

 
Gaganamum VAnum ,Bhuvanamum KAna, VirkAman Angam
Thaganam Mun Seidha ThavapperumArkku, Thadakkaiyum
Semmuganum, MunnAngu Irumoondrena Thondriya, Moodharivin
Maganum UndAyadhandro? Valli! Nee Seidha Vallabame.
 
Play Audio
Verse # 61 – 65
 
Play Audio
Verse # 66
வல்லபம் ஒன்றறியேன், சிறியேன், நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது, பற்றொன்றிலேன்,பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும், நின்திருநாமங்கள் தோத்திரமே.

 
Vallabam Ondrariyen,Siriyen, Nin Malaradi Sem
pallavam Alladhu, Pattrondrilen, Pasumpor Poruppu
Villavar Thammudan VeettriruppAiy! Vinaiyen Thoduttha
Sol AvamAyinum,Nin Thiru NAmangal Thotthirame.
 
Play Audio
Verse # 67
தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

 
Thotthiram Seidhu Thozhudhu, Min Polum Nin Thottram, Oru
MAtthiraip Podhum Manadhil VaiyAdhavar, Vanmai Kulam,
Gotthiram, Kalvi, Gunam Kundri, NAlum Kudilgal Thorum
PAtthiram Kondu Balikku UzhalAnirpar-PAr Engume.
 
Play Audio
Verse # 68
பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும், உருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி, சீரடிக்கே
சாரும் தவமுடையார், படையாத தனம் இல்லையே.

 
PArum, Punalum, Kanalum, VengkAlum, Padar Visumbum,
Oorum, Urugu Suvai Oli, Ooroli Ondrubada,
Serum Thalaivi, SivagAma Sundhari, Seeradikke,
SArum Thavam UdaiyAr, PadaiyAdha Dhanam Illaiye.
 
Play Audio
Verse # 69
தனந்தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவுந்தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே,
கனந்தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

 
Dhanam Tharum, Kalvi Tharum, Oru NAlum ThalarvariyA
Manam Tharum, Dheiva Vadivum Tharum, Nenjil Vanjam IllA
Inam Tharum, Nallana EllAm Tharum, Anbar Enbavarkke-
Ganam Tharum PoonguzhalAl, AbirAmi, Kadaikkangale.
 
Play Audio
Verse # 70
கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில்,
பண்களிக்கும் குரல் வீணையும் கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய, எம்பெருமாட்டிதன் பேரழகே.

 
Kan Kalikkumpadi Kandu Konden, KadambAdaviyil, Pann
Kalikkum Kural Veenaiyum Kaiyum, Payodharamum,
Mann Kalikkum Pacchai Vannamum Aagi, Madhangar Kulap
Pengalil Thondriya, EmperumAttithan Perazhage.
 
Play Audio
Verse # 66 – 70
 
Play Audio
Verse # 71
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்றுநெஞ்சே, இரங்கேல் உனக்கு என் குறையே.

 
Azhagukku Oruvarum OvvAdha Valli,Aru Maraigal
Pazhagich Chivandha PadhAmbuyatthAl, Pani Maa Madhiyin
Kuzhavith Thirumudik Komala YAmalaik kombirukka,
Izhavuttru Nindra Nenje-Irangel, Unakku En Kuraiye.
 
Play Audio
Verse # 72
என்குறை தீரநின்று ஏத்துகின்றேன், இனி யான் பிறக்கின்,
நின்குறையே அன்றி யார் குறை காண், இரு நீள்விசும்பின்,
மின்குறை காட்டி, மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்,
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

 
En Kurai Theera Nindru Ettrugindren, Ini YAn Pirakkin,
Nin Kuraiye Andri YAr Kurai KAn,Iru Neel Visumbin
Minkurai KAtti Meligindra Neridai MelliyalAi
Thann Kurai Theera, Engon Sadai Mel Vaittha ThAmaraiye.
 
Play Audio
Verse # 73
தாமம் கடம்பு, படைபஞ்சபாணம்;, தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

 
DhAmam Kadambu, Padai Pancha BhAnam, Dhanuk Karumbu,
YAmam Vayiravar Etthum Pozhudhu, Emakku Endru Vaittha
Semam Thiruvadi, Sengaigal NAngu, Oli Semmai, Ammai
NAmam Thiripurai, Ondrodu Irandu Nayanangale.
 
Play Audio
Verse # 74
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும், அபிராமவல்லி அடியிணையப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும், பாடவும்,
பொன் சயனம் பொருந்து, தமனியக் காவினில் தங்குவரே.

 
Nayanangal Moondrudai NAdhanum,Vedhamum, NArananum,
Ayanum Paravum AbirAma Valli Adi Inaiyaip
Payan Endru Kondavar, PAvaiyar Adavum PAdavum,
Ponn Sayanam Porundhu Dhamaniyak KAvinil Thanguvare.
 
Play Audio
Verse # 75
தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில், தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால்வரையும்,
பொங்குவர் அழியும், ஈரேழ்புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள், திருமேனி குறித்தவரே.

 
Thanguvar, Karppagath ThAruvin Neezhalil, ThAyar Indri
Manguvar,Mannil VazhuvAp Piraviyai,MAl Varaiyum,
Pongu Uvar Azhiyum, Eerezh Bhuvanamum, Poottha Undhik
Kongu Ivar PoonguzhalAl Thirumeni Kuritthavare.
 
Play Audio
Verse # 71 – 75
 
Play Audio
Verse # 76
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம், நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி, வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான், ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

 
Kuritthen Manatthil Nin Kolam EllAm, Nin Kuripparindhu
Maritthen, Marali varugindra Nervazhi, Vandu Kindi,
Veritthen Avizh Kondrai Venip PirAn, Oru Koottrai, Meyyil
Paritthe, Kudipugudhum Pancha BHAna BHairaviye.
 
Play Audio
Verse # 77
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராஹி என்றே
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

 
Bhairavi, Panchami, PAsAnkusai,Pancha PAni, Vanjar
Uyiravi Unnum Uyar Channdi,KAli, Olirum KalA
Vayiravi, Mandali, MAlini, Sooli, VAraahi-endre
Seyir Avi NAnmarai Ser ThiruNAmangal Seppuvare.
 
Play Audio
Verse # 78
செப்பும், கனக கலசமும் போலும், திருமுலைமேல்,
அப்பும் களப அபிராமவல்லி! அணிதரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்,
துப்பும், நிலவும், எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.

 
Seppum Kanaga Kalasamum Polum, Thirumulaimel,
Appum Kalaba AbirAma Valli! Ani Tharalak
Koppum, Vayirak Kuzhaiyum, Vizhiyin Kozhunkadaiyum,
Thuppum, Nilavum,Ezhudhivaitthen,En Thunai Vizhikke.
 
Play Audio
Verse # 79
விழிக்கே அருளுண்டு, அபிராமவல்லிக்கு, வேதம்சொன்ன
வழிக்கே, வழிபட நெஞ்சுண்டு, எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும், கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே.

 
Vizhikke Arul Undu, AbirAma Vallikku, Vedham Sonna
Vazhikke Vazhibada Nenjundu Emakku, Avvazhi Kidakka,
Pazhikke Suzhandru, Vem PAvangale Seidhu, PAzh Naragak
Kuzhikke Azhundhum Kayavar Thammodu, Enna Koottu Iniye.
 
Play Audio
Verse # 80
கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஓட்டியவா! எண்கண் ஓடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா! நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

 
KoottiyavA Ennai Thann AdiyAril,Kodiya Vinai
OttiyavA! En Kann OdiyavA!Thannai Ullavannam
KAttiyavA! Kanda Kannum Manamum KalikkindravA!
AattiyavA Nadam-Adagath ThAmarai Aaranange.
 
Play Audio
Verse # 76 – 80
 
Play Audio
Verse # 81
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்,
வணங்கேன், ஒருவரை வாழ்த்துகிலேன், நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர், யாவரோடும்
பிணங்கேன், அறிவொன்றிலேன், எண்கண் நீவைத்த பேரளியே.

 
Anange-Anangugal Ninn ParivArangal AagaiyinAl,
Vanangen, Oruvarai vaazhththugilen, Nenjil Vanjagarodu
Inangen, Enadhu Unadhu EndriruppAr Silar YAvarodum
Pinangen, Arivondrilen, En Kann Nee Vaittha Per Aliye.
 
Play Audio
Verse # 82
அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை,உள்ளுதோறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,
வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையே.

 
AliyAr Kamalatthil Aranange! AkilAndamum Ninn
OliyAga Nindra Olir Thirumeniyai,Ulluthorum
Kali Aagi,Andhakkaranangal Vimmi,Karaipurandu
VeliyAi Vidin, Engane Marappen, Ninn Viraginaiye.
 
Play Audio
Verse # 83
விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்,
இரவும் பகலும், இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்,
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்,
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

 
Viravum Pudhu Malar Ittu, Ninn PAdha Viraikkamalam
Iravum Pagalum Irainja VallAr,Imaiyor evarum
Paravum Padhamum, AyirAvadhamum, Bhageeradhiyum,
Uravum Kuligamum, Karpagak KAvum Udaiyavare.
 
Play Audio
Verse # 84
உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிசெஞ்சடையாளை,
வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை
இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

 
UdaiyAlai, Olgu SempattudaiyAlai, Olirmadhi SenjadaiyAlai,
Vanjagar NenjadaiyAlai,Thayangu Nunnool IdaiyAlai,
Engal PemmAn IdaiyAlai,Ingu Ennai Inip PadaiyAlai,
Ungalaiyum PadaiyAvannam PArtthirume.
 
Play Audio
Verse # 85
பார்க்கும் திசைதோறும் பாசாங்குசமும், பனிச்சிறை
வண்டார்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள், திருமேனியும் சிற்றிடையும்,
வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

 
PArkkum Dhisai Thorum PAsAngusamum, Panich Chirai
VandArkkum Pudhumalar Aindhum, Karumbum, En AllAl EllAm
Theerkkum ThiripuraiyAl Thiru Meniyum, Sittridaiyum,
VArk Kunguma Mulaiyum, Mulaimel Mutthu MAlaiyume.
 
Play Audio
Verse # 81 – 85
 
Play Audio
Verse # 86
மால்-அயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்தகப்பு
வேலை, வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்,
பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

 
MAl Ayan Theda, Marai Theda, VAnavar Theda Nindra
KAlaiyum, Soodagak Kaiyaiyum, Kondu-Kadhitthagappu
Velai VengkAlan Enmel Vidumpodhu, Veli Nill Kandaay
PAlaiyum Thenaiyum PAaiyum Polum Panimozhiye.
 
Play Audio
Verse # 87
மொழிக்கும், நினைவுக்கும், எட்டாத நின் திருமூர்த்தி, என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால், மதனை
அழிக்கும், தலைவர், அழியா விரதத்தை, அண்டம் எல்லாம்
பழிக்கும் படி, ஒருபாகம் கொண்டாளும், பராபரையே.

 
Mozhikkum, Ninaivukkum,EttAdha Ninn Thirumoorthi, Endhan
Vizhikkum Vinaikkum Veli NinradhAl! VizhiyAl Madhanai
Azhikkum, Thalaivar, AzhiyA Viradhatthai, Andam EllAm
Pazhikkumpadi, Oru PAgam KondAlum ParAparaiye.
 
Play Audio
Verse # 88
பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பக்தருக்குள்,
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது, தரியலர் தம்
புரம் அன்று, எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
சிரம் ஒன்று, செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே.

 
Param Endnru Unai Adaindhen, Thamiyenum, Un Baktharukkul,
Tharam Andru Ivan Endru Thallath ThagAdhu-Thariyalartham
Puram Andru, Eriyap Poruppuvil VAngiya,Bodhil Ayan
Siram OnDru SettragaiyAn Idap PAgam Sirandhavale.
 
Play Audio
Verse # 89
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்க,
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவுமற்று, அறிவு
மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

 
Sirakkum Kamalath Thiruve! Ninn Sevadi Senni Vaikka
Thurakkam Tharuma Ninn Thunaivarum Neeyum, Thuriyamattra
Urakkam Thara Vandhu, Udambodu Uyir Uravumattru Arivu
Marakkum Pozhudhu, En Munne Varal Vendum Varundhiyume.
 
Play Audio
Verse # 90
வருந்தா வகை என் மனத்தாமரையினில்,
வந்துபுதுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக,
இனிஎனக்குப் பொருந்தாது, ஒருபொருள் இல்லை, விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

 
VarundhAvagai, En ManatthAmaraiyinil
Vandhu Pugundhu IrundhAl,Pazhaiya IruppidamAga,
Ini Enakkup PorundhAdhu Oru Porul Illai, Vinn Mevum Pulavarukku
VirundhAga Velai MarundhAnadhai Nalgum Melliyale.
 
Play Audio
Verse # 86 – 90
 
Play Audio
Verse # 91
மெல்லிய நுண் இடை, மின் அனையாளை, விரிசடையோன்,
புல்லிய மென்முலை, பொன் அனையாளைப் புகழ்ந்து, மறை
சொல்லிய வண்ணம், தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடூரும் பதம் தருமே.

 
Melliya Nunn Idai Minn AnaiyAlai Virisadaiyon
Pulliya Menn Mulaip Pon AnaiyAlai, Pugazhndhu Marai
Solliyavannam Thozhum Adiyaaraith Thozhumavarkku,
Palliyam Artthezha, Venn Pagadoorum Padham Tharume.
 
Play Audio
Verse # 92
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய், இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

 
Padhatthe Urugi, Ninn PAdhatthile Manam Pattri, Undhan
Idhatthe Ozhuga, Adimai KondAi,Ini YAn Oruvar
Madhatthe Madhi Mayangen,Avar Pona Vazhiyum Sellen,
Mudhal Dhevar Moovarum YAvarum Pottrum Mugizh Nagaiye.
 
Play Audio
Verse # 93
நகையே இத்திந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு,
முகையே முகிழ்முலை, மானே முதுகண், முடிவில் அந்த
வகையே, பிறவியும் வம்பே மலைமகள் என்பது, நாம்
மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

 
Nagaiye Itthindha GjnAlamEllAm Pettra NAyagikku,
Mugaiye Mugizhmulai, MAne, Mudhukann, Mudivuil Andha
Vagaiye, Piraviyum Vambe, Malaimagal Enbadhum NAm,
Migaiye Ivalthann Thagaimaiyai NAdi Virumbuvadhe.
 
Play Audio
Verse # 94
விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி, மெய்புளகம்
அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி, அறிவிழந்து,
சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும், பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.

 
Virumbith Thozhum AdiyAr Vizhineer Malgi, Mei Pulagam
Arumbi, Thadhumbiya AnandhamAgi, Arivizhandhu
Surumbir Kalitthhu, Mozhi ThadumAri, Munn Sonna EllAm
Tharum Pitthar Avar EndrAl AbirAmi Samayam Nandre.
 
Play Audio
Verse # 95
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்,
அன்றே உனதென்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே! அருள்கடலே! இமவான் பெற்ற கோமளமே.

 
Nandre Varuginum, Theedhe Vilaiginum, NAn Arivadhu
Ondreyum Illai, Unakke Param, Enakku Ulla EllAm
Andre Unadhendru AlitthuVitten, AzhiyAdha Gunak
Kundre! Arulkadale! ImavAn Pettra Komalame.
 
Play Audio
Verse # 91 – 95
 
Play Audio
Verse # 96
கோமள வல்லியை அல்லியம் தாமரை, கோயில் வைகும்,
யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய
சாமள மேனி, சகலகலா மயில், தன்னைத் தம்மால்,
ஆமளவும் தொழுவார், எழுபாருக்கும் ஆதிபரே.

 
Komalavalliyai, Alliyann ThAmaraik Koyil Vaigum
YAmala Valliyai, Edham IlAlai, Ezhudhariya
SAmala Meni, SakalakalA Mayil,Thannai ThammAl,
Aamalavum ThozhuvAr,Ezhu PArukkum Aadhipare.
 
Play Audio
Verse # 97
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்,
போதில் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

 
Aadhitthan, Ambuli, Angi Kuberan, Amararthangon,
Podhil Bhiraman PurAri, MurAri Podhiyamuni,
Kadhip Porubadaik Kandhan, Ganapathi, Kaman Mudhal
SAdhittha Punniyar Ennilar Potrruvar, Thaiyalaiye.
 
Play Audio
Verse # 98
தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்க்கு,
கைவந்த தீயும், தலைவந்த ஆறும், கரந்ததெங்கே?
மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்,
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே.

 
Thaivandhu Ninn Adith ThAmarai Soodiya Sankararkku
Kaivandha Theeyum, Thalai Vandha Arum, Karandhadhenge?
Mei Vandha Nenjil AllAl OrukAlum Viragar Thangal,
Poivandha Nenjil Pugal AriyA Madap Poonguyile.
 
Play Audio
Verse # 99
குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை, கோல இயல்,
மயிலாய் இருக்கும், இமயாசலத்திடை, வந்து உதித்த
வெயிலாய் இருக்கும், விசும்பில், கமலத்தின் மீது அன்னமாம்,
கயிலாயருக்கு அன்று, இமவான் அளித்த கனங்குழையே.

 
KuyilAi Irukkum KadambAdaviyidai,Kola Iyal
MayilAi Irukkum, ImayAchalatthidai, Vandhu Udhittha
VeyilAi Irukkum, Visumbil,Kamalatthin Meedhu AnnamAm,
KayilAyarukku Andru,ImavAn Alittha Ganankuzhaiye.
 
Play Audio
Verse # 100
குழையைத் தழுவிய கொன்றையமந்தார் கமழ் கொங்கைவல்லி,
கழையைப் பொருதற் திருநெடுந்தோளும், கரும்புவில்லும்,
விழையைப்-பொருதிறல் வேரியம்பாணமும், வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

 
Kuzhaiyaith Thazhuviya Kondraiyan ThAr Kamazh Kongaivalli,
Kazhaiyaip Porudhar Thiruneduntholum, Karuppu Villum,
Vizhaiyaip Poruthiral Veriyam BhAnamum Venn Nagaiyum,
Uzhaiyaip Porukannum Nenjil Eppodhum Udhikkindrave.
 
Play Audio
AbirAmi AnthAdhi Noorpayan

 

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை, அங்குச பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு, ஒரு தீங்கு இல்லையே.

 
AatthAlai, Engal AbirAma Valliyai, Andam EllAm
PootthAlai,MAdhulam Poo NiratthAlai, Puvi Adangak
KAtthAlai, Angusa PAsAngusamum Karumbum Angai
SertthAlai,Mukkaniyaith, ThozhuvArkku oru Theengillaiye.
 
Play Audio
Verse # 96 – 100 & Noorpayan
 
Play Audio

 

******************************** Subham *****************************