Parasakthi Family

Abirami Andhadhi

Presenter: Smt. Mahalakshmi Senthilkumar (Parasakthi Family Member)

கணபதி காப்பு

 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

 
Ganapathi KAppu

 

ThAramar Kondraiyum Senbaga MAlaiyum SAtthum Thillai
Oorar atham PAgatthu Uma Maindhane !Ulagezhum Pettra
Seer AbirAmi AndhAdhi Eppodhum En Sindhaiyulle
KAramar Meni Ganapathiye ! Nirkka Katturaiye.
 
Play Audio
Verse # 1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.

 
Udhikkindra Senkadhir Ucchithilagam Unarvudoiyor
Madhikkindra MAnickamMAdhulam Podhu MalarkKamalai
Thudhikkindra Minkodi Menkadik Kunguma Thoyam Enna
Vidhikkindra Meni AbirAmi Endran Vizhutthunaiye.
 
Play Audio
Verse # 2

 

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

 
Thunaiyum Thozhum Dheivamum Pettra Thaayum Surudhigalin
Panaiyum Kozhundhum Padhi Konda Verum Panimalar
Poonkanaiyum Karuppucchilaiyum VenPAsAngusamum Kaiyil
Anaiyum ThiripuraSundari Aavadhu Arindhaname.
 
Play Audio
Verse # 3
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழு நரகுக்கு உறவாய மனிதரையே.

 
Arinthen Evarum Ariyaa Maraiyai, Arinthukondu
Serinthen, Unadhu Thiruvadikke Thiruve! Veruvip
PirinthEn, Nin Anbar Perumai EnnAdha karuma NenjAl,
MarindhE Vizhu Naragukku UravAya Manidharaiye.
 
Play Audio
Verse # 4
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 
Manidharum, Thevarum, MAyA Munivarum, vandhu, Senni
Kunidharum Sevadik Komalame! KondraivAr Sadaimel
Panitharum Thingalum, PAmbum, Bhageeradhiyum Padaittha,
Punidharum Neeyum En Pundhi EnNaalum Porundhugave.
 
Play Audio
Verse # 5
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

 
Porundhiya Muppurai, Seppurai Seyyum Punar MulaiyAL,
Varundhiya Vanji Marungul Manonmani, Vaar Sadaiyon
Arundhiya Nanju AmudhAkkiya Ambigai, AmbuyamEl
Thirundhiya Sundaree, Anthari-pAdham En Senniyathe.
 
Play Audio
Verse # 1-5
 
Play Audio
Verse # 6
சென்னியது, உன் பொற் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

 
Senniyadhu, Un por Thiruvadith ThAmarai ! Sindhaiyulle
Manniyadhu, Un ThiruMandhiram; Sindhura Vannappenne!
MunniyaNin AdiyArudan Koodi, Murai Muraiye
Panniyadhu, Enrum Undhan ParamAgama Patthadhiye.
 
Play Audio
Verse # 7
ததியுறு மத்தில், சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே!

 
Thadhiyuru Matthil Suzhalum En Aavi, Thalarviladhor
Kadhiyuruvannam Karudhu KandAi-KamalAlayanum,
MadhiyuruVeni Magizhnanum, MAlum, Vanangi, Enrum
Thudhiyuru SevadiyAi! SindhurAnana Sundhariye!
 
Play Audio
Verse # 8
சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே.

 
Sundhari Endhai Thunaivi, En PAsaththodarai EllAm
Vandhu Ari Sindhura VannatthinAl, Magidan Thalaimel
Anthari, Neeli, AzhiyAdha Kannigai, Aranatthon
Kanthari kaitthalatthAl-MalartthAl En Karutthanave.
 
Play Audio
Verse # 9
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

 
Karutthana Endhaithan Kannana, Vannak Kanagaverpil
Perutthana,PAl Azhum Pillaikku Nalgina, Per Arulkoor
Thirutthana BhAramum; Aramum, Sengai Silaiyum, Ambum,
Murutthana Mooralum, Neeyum, Amme! Vandhu Enmun Nirkkave.
 
Play Audio
Verse # 10
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே.

 
Ninrum Irundhum Kidandhum Nadandhum Ninaippadhu Unnai,
Enrum Vananguvadhu Un MalartthAl! EzhudhA Maraiyin
Onrum Arum Porule! Arule! Umaiye! Imayath
thandrum Pirandhavale! AzhiyA Mutthi Anandhame!
 
Play Audio
Verse # 6 – 10
 
Play Audio
Verse # 11
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

 
AnandhamAi, En ARivAi, Niraindha AmudhamumAi,
VAn AndhamAna VadivudaiyAl, Marai NAnginukkum
ThAn AndhamAna, CharanAravindhamThavala nirak
KAnam Tham AdarangAm EmpirAn Mudik Kanniyadhe.
 
Play Audio
Verse # 12
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே.

 
Kanniyadhu Un Pugazh, Karppadhu Un NAmam, Kasindhu Bhakthi
Panniyadhu Un Iru Paadhaampuyaththil, Pagal IravA
Nanniyadhu Unnai Nayandhor Avaiyatthu-NAn Mun Seidha
Punniyam Ethu? En Amme! Puvi Ezhaiyum pootthavale!
 
Play Audio
Verse # 13
பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக்கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

 
Pootthavale! Bhuvanam PathinAngaiyum Pootthavannam
Katthavale! Pin Karandhavale! Karaikkandanukku
Mooththavale! Endrum MoovA Mukuntharkku Ilaiyavale!
MAtthavale! Unnai Andri Mattror Dheivam Vandhippadhe.
 
Play Audio
Verse # 14
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண் அளியே.

 
Vandhippavar Unnai, VAnavar DhAnavar Anavargal,
Sindhippavar, Nattrisaimugar NAranar; Sindhai Ulle
Pandhippavar, AzhiyAp ParamAnandhar; PAril Unnai
Sindhippavarkku ElidhAm EmpirAtti ! Nin ThannAliye.
 
Play Audio
Verse # 15
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார், மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

 
Thannalikku Endru, Munne Pala Kodi Thavangal SeivAr,
Mann Alikkum Selvamo PeruvAr, Madhi VAnavar thamm
Vinn Alikkum Selvamum AzhiyA Mutthi veedum, Andro?
Pann Alikkum Sol Parimala YAmalaip Painkiliye.
 
Play Audio
Verse # 11 – 15
 
Play Audio
Verse # 16
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

 
Kiliye, Kilaigjnar ManatthE Kidandhu Kilarndhu Olirum
Oliye, Olirum Olikkidame, Ebnil Ondrum Illaa
VEliye, Veli Mudhal Bhoodhangalaagi Virindha Amme!
Aliyen Arivalavirkku AlavAnadhu Adhisayame.
 
Play Audio
Verse # 17
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி ஜயமானது அபஜயம் ஆக, முன் பார்த்தவர் தம்
மதி ஜயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே.

 
AdhisayamAna VadivudaiyAl, Aravindham EllAm
Thudhisaya Aanana Sundharavalli, Thunai Iradhi
pathi JayamAnadhu Abajayam Aaga mun Parththavar ttham
madhi Jayam Aaga Andro, VAma PAgatthai Vavviyadhe.
 
Play Audio
Verse # 18
வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே!
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

 
Vavviya PAgatthiraivarum Neeyum Magizhndhirukkum
Sevviyum, Ungal Thirumanak Kolamum, Sindhaiyulle!
Avviyam Theertthu Ennai Aanda PorPAdhamum Agivandhu-
Vevviya kAlan Enmel Varumpodhu-Veli Nirkkave!
 
Play Audio
Verse # 19
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுள்ளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

 
Velinindra Nin Thirumeniyaip PArththu, En Vizhiyum Nenjum
Kalinindra Vellam Karai Kandadhillai, Karuththinulle
Thelingindra GjnAnam Thigazhgindradhu Enna Thiru Ullamo?
Olinindra Konangal Onbadhum Mevi Uraibavale.
 
Play Audio
Verse # 20
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 
Uraigindra Nin Thirukkoyil-Nin Kelvar Oru Pakkamo,
Araigindra NAn Maraiyin Adiyo Mudiyo, Amudham
Niraigindra Ven Thingalo, Kanjamo, Endhan Nenjagamo,
Maraigindra Vaarithiyo? PooranAchala Mangalaiye.
 
Play Audio
Verse # 16 – 20
 
Play Audio
Verse # 21
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கலை செங்கை, சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.

 
Mangalai, Senkalasam MulaiyAl,MalaiyAl, Varuna
Sangalai Sengai SakalakalA Mayil ThAvu Gangai
Pongu Alai Thangum Purisadaiyon PudaiyAl, UdaiyAl
Pingalai, Neeli, SeyyAl, VeliyAl, Pasum Penkodiye.
 
Play Audio